யாழ். மதவடிமாணிகத்திடமிருந்து மடல்...
அன்பான தமிழ் சொந்தங்களே!.....
இடைக்கிடையே என்னுயிர் உள்ளவரை ஈழத்தில் நடக்கிற சம்பவங்கள் பற்றி உங்களுக்கு எழுதுவேன்!
யாழ் மாவட்டத்தின் நிலை பதட்டமானதாகவே இருக்கின்றது.எந்த நேரத்தில் என்ன நடக்கும்? யார் சுடப்படுவார்கள்? எங்கு துப்பாக்கிச்சத்தம் கேட்கும் ?எந்த காவலரன் மீது கைக்குண்டு வீசப்படும்? எந்தப்பகுதியில் வீதிக்கடமை இராணுவம் மக்கள் மீது தாக்கும்?.எந்த ஆமிக்காரன் எம்மை மறித்து சோதனையிடுவான் ?என்று விடை தெரியாத பல வினாக்களுடன் தமது அன்றாட கடமையினை மக்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.
காலையில் பத்திரிகை வாசித்தபின்னர் தான் தமது அன்றாட கடமைகளை மக்கள் செய்யமுடியும்.இன்று கர்த்தாலா இல்லையா? நேற்றிரவு நடந்தேறிய சம்பவங்கள் எங்கு நடந்தேறின?.வானொலி செய்தியிலே தவறிய சம்பவங்கள் என்னென்ன? இவற்றை அறிந்துகொள்ளாமல் எப்படி வீட்டுக்கு வெளியில் இறங்குவது?இது இப்படியிருக்க பனையால ஏறியவைனை மாடேறி மிதித்த கதைபோல இரவுத்திருடர்கள் தமது கைவரிசையினை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள் திருட்டு மட்டுமா கொலைகளையும் செய்கிறார்கள்.தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தினையும் அதனை மேற்கொள்வோரினையும் சிங்கள அரசவானொலி மூலம் கொச்சைப்படுத்துகின்றனர்.இவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கு தேசத்துரோகிகள்.சனநாயக நீரோட்டத்தில் இணைந்து விட்டோம் என்று கூறிக்கொண்டே ஆயுதங்களுடன் முகாம் அமைத்து சிங்கள இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் சிங்களவன் போடும் எச்சில் சோற்றுக்கும் எலும்புத்துண்டுக்கும் அலைபவர்கள்.
இவர்களும் இவர்களது குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் ஏதோ தங்களின் ஆட்சிதான் இங்கு நடக்கின்றது என்று அராஜகம் செய்துகொண்டிருக்கின்றார்கள். வீதியில் மக்கள் இறங்க பயங்கொள்ளும் நேரங்களில் எல்லாம் இவர்கள் திரிகிறார்கள்.நாய்கள் குரைக்கின்றன ஆனால் இந்த நாய்கள் பயப்படுவதில்லை.அவர்களுக்கு தெரியும் என்னவென்று பார்க்க எவரும் வரமாட்டார்கள் என்று.மிஞ்சிப்போனால் மின்விளக்குள் ஒருதடவை ஒளிபாய்ச்சி அணையும்.சும்மா றோட்டில பகலில போறவங்களையே ஆமி சுட்டுப்போட்டு கைக்குண்டெறியவந்ததால சுட்டோம் என்று அறிக்கை விடுகிறான் அப்பிடியிருக்க யாரால இப்படி இரவு 1 மணிக்கெல்லாம் நடமாட முடியும்.எமக்கு தெரியும் இவங்கள் ஆமியோட தயவிலதான் களவெடுக்கிறாங்கள் எண்டு.
சில நாளைக்கு முன்னர் சுதுமலையில ஒரு கள்ளனை சனம் பிடிச்சுப்போட்டுதாம் அப்ப இவன்சொன்னானாம் "என்னை ஆமியில குடுத்தாலும் பொலிசில குடுத்தாலும் பரவாயில்லை என்னால வெளியில வருகிற வழி தெரியும்" என்று. இப்பிடிச்சொன்னபின்னும் சனம் சும்மா விடுமா. செமத்தியா சாத்தி குற்றுயிரும் குலையுயிருமாக தெருவில போட்டுப்போட்டுதுகள்.வாயைக்கட்டி வயித்தைக்கட்டி சேக்கிறதில நம்மட சனம் உண்மையில கெட்டிகாரர்தான் அதை இந்த தேசத்துரோகிகள் கொண்டுபோறத பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?....அந்தக்கள்ளன் ஒரு சிங்களவன் என்று சனம் சொல்லுது. ஆஸ்பத்திரியில போட்டது பொலிசுதான் அங்க இராணுவம் பாதுகாப்பு கொடுத்ததாம் ஆனா அவன் செத்துப்போட்டானாம்.
இப்பிடி சமூகவிரேதச்செயல்கள் கலாச்சார சீர்கேடுகளை கட்டவிழ்த்து விட்டு அதற்கு துணைபோய்கொண்டிருக்கும் சிங்கள அரசா எமக்கு விடிவைத்தரபோகுது.அது ஒருக்காலும் தராது...உண்மையில யாழ்பாணம் பழையபடி 80 காலப்பகுதிக்கு போய்கொண்டிருக்கு...சின்ன வித்தியாசம் ..நீங்க காந்தி இன்றிருந்தால் எப்பிடி இருந்திருப்பார் இன்று நகைச்சுவையான கட்டுரைகளைபடித்திருப்பீங்க...அதுமாதிரித்தான் 2006 ம்ஆண்டில 80 காலப்பகுதி சம்பவங்கள் யாழில நடக்குது..
றோட்டில போறதெண்டால் அதுக்கு எங்களுக்கு ஒரு தில்லு வேண்டும்.5 நிமிசத்துக்கு ஒருக்கா இராணுவத்தொடரணி போய்கொண்டிருக்கும் போனா எங்களுக்கென்ன? இங்கதான் பிரச்சனை வீதியில அரசாங்கத்தின்ர சம்பளத்துககாக காய்ந்துகொண்டிருக்கிற சட்டித்தொப்பிக்காரங்கள் சும்மா விடுவாங்களே எல்லாரையும் சைற்றாக நிக்கச்சொல்லி விடுவாங்கள் நாங்க போகிற இராணுவ வாகனங்களுக்கு இராணுவ மரியாதை செலுத்த வேணுமா?.அப்பத்தானே கிளைமோர் கண்ணி ஒன்று வெடிச்சுதென்றால் நிக்கிற எங்கள்ள 10 பேரை சுட்டுப்போட்டு பிபிசி தமிழோசைக்கு கணக்குக்காட்டலாம்.இல்லாவிடில் ஒடிக்கொண்டிருக்கிறனாங்கள் குச்சொழுங்கைகளுக்குள்ளால பாய்ஞசிடுவம் தானே..இவங்கள் உண்மையில வீரர்பரம்பரையில பிறந்தவங்கள் என்றால் ஏன் இப்படிச்செய்யிறாங்கள்?..ஆனா ஒன்று மட்டும் சொல்லுவன் இப்பிடி றோட்டில போற ஆமி வாகனங்கள் மட்டும் மக்கள் படையின்ற கிளைமோரில சிக்கமுடியாது என்று கிளைமோர் கணணிவெடி செய்தவங்கள் சொல்லவில்லை...
யாரு சிங்கள இராணுவத்துக்கு கறுப்புத்துணி சப்ளை செய்யிறாங்களோ தெரியல்ல.கோவணத்துண்டு அளவில கொடுததிருக்கிறாங்கள் ..ஆமிக்காரர் இதை எங்க கட்டிறது என்டுதெரியாம பலமாதிரி கட்டிக்கொண்டிருக்கிறானுகள்..சிலபேர் வாயிலகட்டிறாங்கள் சிலபேர் தலையில கட்டி பின்னால பின்னல் விட்டமாதிரி தொங்க விடுறாங்கள்..சில பேர் இடுப்பில கட்டுறாங்கள்.சிலபேர் தங்கட காட்டுமிராண்டி முகத்தை மறைத்துக்கட்டுறாங்கள்.இப்பிடி எல்லாம் கட்டிக்கொண்டு பொம்பிளைப்பிள்ளையள் பஸ்சுக்கு நிக்கிற இடங்கள் போற இடங்களில போஸ் குடுக்கினம்... எதோ தாங்க வீராதி வீர மன்மத சூரங்கள் பாதுகாப்பு கடமையிலை கடுமையாக இருக்கினமாம்..போய் மனிசி பிள்ளையளோட தோட்டம் வெட்டியாவது இருக்கிறத விட்டுட்டு ஏன்தான் இப்பிடி அலைஞ்சு செத்துப்போறாங்களோ?
எங்கட சனம் பயத்தில பிறகொருநேரத்தில அவன் அடிக்கமாட்டான் என்று சிரிக்கிறத இவன் பிழையா விளங்கி ஏதோ தன்னையும் பார்த்து நட்புறவாடுதுகள் என்றும் நினைக்கிறான்...இராணுவ வாகனங்கள் போற முக்கிய வீதிகளில(பலாலி,காங்கேசன்துறை,ஏ9) கடைகளுக்கு முன்னால சைக்கிள்கள் வாகனங்கள் விடக்கூடாதாம்..ஆமிக்காரன் எங்கட கடைக்காரர் எல்லாரையும் வெருட்டி வைத்திருக்கிறான்..யாரும் வாகனம் விட்டால் உங்களுக்குத்தான் அடிப்பம் என்று சொல்லி இருக்கிறான்.பேப்பர்வாங்கக்கூட றோட்டில நின்டு காசை நீட்ட வேண்டியிருக்கு..மோட்டர் சைக்கிளை கடைக்குள்ளை கொண்டு போய் சாமான் வாங்கிறதா?.மெயின்றோட்டில எங்கதான் சைக்கிள் விடுறது? இது என்ன கொடுமை?.எப்பவோ ஒருக்கா வாகனத்தில பொருத்தின கிளைமோர் வெடிச்சிட்டுதாம் அதுக்காக எல்லா நேரமும் அதிலையா வைப்பாங்கள்..? றோட்டில எத்தின மரம் இருக்கு?...மோட்டுச்சிங்களவன் என்று சும்மாவா சொல்லுறது...
கிட்டடியில ஆமிச்சென்றிகளுக்கு முன்னால இருந்த றோட்டின்ர இரண்டு பக்கமும் ஒரு அடி அகலத்துக்கு பள்ளம் வெட்டினாங்கள்.எல்லா வாகனம் இறங்கி உருட்டடிச்செல்லாத குறைக்கு சில்லுகளை போட்டு எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை நீதிமன்றத்தில முறையிட்டது..நீதிமன்றம் உடனடியாக பள்ளங்களை மூடுங்க என்று உத்தரவு போட்டதாக கேள்வி..அடுத்த சில நாட்களில பள்ளங்கள் எல்லாம் ஈர மண்ணும் கல்லும் போட்டு மேடுகளாக்கப்ப்டன..இப்பவும் காய்ந்து சிதைந்து போகாத மேடுகள் பலவற்றில் இறங்காத குறையாக சில்லுகளை ஏற்றி இறக்க வேண்டியிருக்கு..ஏன் இப்பிடி செய்யீனம் தெரியுமா மோட்டபைக்கில வந்து கைக்குண்டு எறியிறத தடுக்கத்ததான்...ஆனாலும் எங்கட பொடியல் எறியிறாங்கள் தானே...தர்மத்தின் முன்னால் எந்த மேடு என்ன பள்ளம் என்ன...இது இவங்களுக்கு புரியாது ...
உதயன் பேப்பர் நிறுவனத்தை தாக்கின கும்பல் ரவுண் பக்கமாத்ததான் தப்பி ஓடினது..இங்கதானே அவையின்ர தியேட்டர் முகாம் இருக்கு..அதுக்குள்ள இதய வீணையில முழுப்பூசனிக்காயை சோத்தில மறைக்கிறான் பேடியார்..நேற்று அநியாயமா 7 தமிழ்பொடியள்களை நெல்லியடியில சுட்டுப்போட்டாங்கள் குண்டு எறிஞ்சவங்களை பிடிக்க வக்கில்லை பிறகு சும்மா வேலைக்கு போன பொடியளையா சுடுறது.அதுக்கு ஈபிடிபி காரரும் வக்காளத்து வாங்கீனம்...உண்மையில 7 பொடியளும் குண்டோட வந்திருந்தால் இராணுவ முகாமையே சுக்கு நுர்றாக்கி விட்டிருப்பானுகள்.யாருக்கு கதை விடுகிறார் இராணுவப்பேச்சாளர் பிரசாத் அமரசிங்க,இவன் ஒரு புழுகு வெடியன் என்று திருகோணமரையில குண்டு போட்டது புலிகள் என்றுசொன்னதை கண்காணிப்புக்குழு நிராகரித்து இராணுவம் தான் என்று சொன்னபோதே உலகம் தெரிஞ்சிருக்க வேணும்
இன்று இவ்வளவும் போதும்..பிறகு ஒருநாள் எழுதுறன்







