|
1. ஊழியர்களிடையே பிரிவை ஏற்படுத்த சில ஊழியர்களை பதவிகளில்
இருந்து இடைநிறுத்துவது.
2. மாற்றுக் குழுக்களை நிறுவி (10 தொடக்கம் 20 பேர் கொண்ட குழு)
அவர்களின் மூலம் பத்திரிகைகளில் அறிக்கைகள் விடுவது, அதன் மூலம்
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு
பலமில்லை என்று வெளிப்படுத்துவது அல்லது இரண்டு அணி உள்ளது
போன்ற தோற்றப்பாட்டைக்காட்டுவது. (இரண்டு மூன்று பேர் மட்டுமே
தீவிரமாக செயற்படுவதாகவும் மற்றவர்கள் தங்களது மேலதிகாரிகளை
திருப்திப்படுத்துவதற்காக இருப்பதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.)
சரி துணைவேந்தர் ஒருவர் மட்டும் எடுக்கும் முடிவை பல்கலைக்கழக
சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை அதற்காக தானே பல்கலைக்கழக பேரவை (செனற்)
இருக்கின்றது என்று எண்ணுபவர்களுக்கு..... அதற்குள்ளும் ஊழல்கள்
இருப்பது அதிர்ச்சி தரும் செய்தி!
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தை விழுங்கி ஏப்பம் விட்ட பிரபல
பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் உட்பட பலரை அரசாங்கம் கடந்த
ஐந்து வருட காலத்தில் பல்கலைக்கழக பேரவையில் அங்கம் வகிக்க
அனுமதி அளித்துள்ளது! இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின்பும்
பல்கலைக்கழக நிர்வாகம் சரியான முடிவுகளை எடுத்துத்தான் தனது
நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்கள் எண்ணுவார்களே ஆயின் அது
துரதிர்ஷ்டமே.
மற்றவர்களைப் பற்றி ஆராய்வதிலும் பார்க்க பிரபல பத்திரிகையின்
நிர்வாக இயக்குனர் ஏன் பல்கலைக்கழக பேரவையில் அங்கம்
வகிக்கவேண்டும் என்பதன் காரணத்தை பத்திரிகையாளன் என்ற வகையில்
மக்கள் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளோடு
ஒத்துப்பார்ப்பதன் மூலம் அதன் உள்நோக்கத்தை இலகுவாக
விளங்கிக்கொள்ள முடியும்!
1. பிரபல பத்திரிகை குடாநாட்டு மக்களின் மனதில் மிக ஆழமாகவே
குடிகொண்டுள்ளது. ஏனெனில் சில காலமாக மக்களுக்கு அளப்பரிய சேவை
ஆற்றியது என நம்பப்படுகின்றது. இப்பத்திரிகையில்
குறிப்பிடப்படும் விடயங்கள் அனைத்தும் உண்மை என்று மக்கள்
நம்புகின்றார்கள். (அமெரிக்காவிற்கு தப்பி ஒடிய இந்திய புலனாய்வு
அதிகாரி பொற்கோயில் நடவடிக்கையில் நடந்து கொண்ட முறையால் இந்திய
இராணுவத்தில் இருந்து இந்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றம்
பெற்றமை போல - நன்றி ரிஷியின் புலனாய்வு அரசியல்)
2. மக்களிடம் செல்வாக்கு பெற்ற பத்திரிகையில் சில விடயங்கள் (அரசியல்)
மட்டும் வெளிவர குடாநாட்டில் நடந்துகொண்டிருக்கும் சில
விடயங்களைப்பற்றி மூச்சு விடாமல் இருக்க வேண்டிய கட்டாயம்
இருக்கின்றது. குறிப்பாக கல்வியி;ல் ஏற்படுத்தப்படுகின்ற அழிவு
வேலைகள். அதேவேளை மக்களை வேறுபக்கமும் திசை திருப்பவேண்டிய
தேவையும் இருக்கின்றது?
(முன்பு பித்தன் பதில்கள் என்று அப்பட்டமான ஆபாசமான பதில்களை
பத்திரிகையூடாக வெளியிடுவதால் பாலியல் சார்ந்த விடயங்களை மக்கள்
மத்தியில் மலினப்படுத்துவது, தற்போதும் சகோதர பத்திரிகை மூலம்
செய்து வருகின்றது.)
3. எந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்
எந்தச் செய்தியை பிரசரிக்காது விடவேண்டும் என்ற முடிவு
நிர்வாகத்தாலே எடுக்கப்படுகின்றது. அதற்கு வேறு வகையான
விளக்கமும் கொடுக்கப்படுகின்றது. (வியாபாரத்தை பாதிக்கும்,
சிலரின் எதிர்ப்பைச் சந்தித்தல் போன்ற சில போலிக் காரணங்கள்)
4. எல்லாச் செய்திகளையும் வெளியிட்டு நடுநிலைமை போல்
காட்டிக்கொண்டாலும், வெளிவிடப்படும் செய்திகளுக்கு
கொடுக்கப்படும் முக்கியத்துவம் நிர்வாகத்தின் அல்லது
ஆசிரியபீடத்தின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.
அண்மையில் ஊழியர் சங்க போராட்டம் சம்பந்தமான அறிக்கைகளை
உதாரணமாகப் பார்க்கலாம். (இரண்டு அறிக்கைகள்)

(ஊழியர்களின் அறிக்கை மூன்று கொலம் 9 சென்ரிமீற்றர் அளவு)

(ஊழியருக்கு எதிரான அறிக்கை மூன்று கொலம் 17 சென்ரிமீற்றர் அளவு)

மேற்படி அறிக்கையானது பிரபல பத்திரிகை ஒன்றின் முன்பக்கத்தில்
21.06.2004 இல் பிரசுரிக்கப்பட்டது. இதன் தலையங்கத்தினை
வாசிக்கும் ஒரு சாதாரண வாசகனுக்கு ஏற்படும் கருத்து என்பது
முக்கியமானது.
சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில்
வெளியிடப்பட்ட மாணவர்களின் அறிக்கையானது, மக்களுக்கு ஊழியர்களின்
மேல் எதிரான கருத்தினை தோற்றுவிக்கும் வகையில் தலைப்பிட்டு
வெளியிடப்பட்டுள்ளது.
இன்னுமொரு பேரவை உறுப்பினரும் பிரபல சட்டவல்லுனர் ஒருவரின்
செயலும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஊழியர் ஒருவருக்கு எதிராக நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முடிவுக்கு
எதிராக ஊழியர் சங்கத்தினால் மனித உரிமைகள் குழுவிற்கு
செய்யப்பட்ட முறைப்பாட்டின் முடிவு ஒன்று நிர்வாகத்திற்கு
எதிராக அமையவே அம்முடிவை அமுல்படுத்துவதற்கு காலம் கடத்தும்
நிர்வாகம் மனித உரிமைகள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட முடிவைப்
பரிசீலிப்பதற்காக குறிப்பிட்ட பேரவை உறுப்பினரை அமர்த்தியது.
ஆனாலும் பத்து மாதங்கள் கடந்தும் அம்முடிவுக்கான அறிக்கை
சமர்ப்பிக்கப்படவில்லை!
மேலே விபரிக்கப்பட்டவை எல்லாமே அறிந்த, வெளிவந்த விடயங்கள்
இன்னும் எத்தனை வெளிவராமல் மூடி மறைக்கப்டபட்டுள்ளன?
இவை தவிர இன்னும் சில.....
பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை?
1. 300 மாணவர்கள் அடிப்படை ஆங்கில பாடத்தில் சித்தியடையவில்லை.
மாணவர்கள் படிக்கவில்லை என்று காரணம் கூறினாலும் இத்தனை தொகையான
மாணவர்கள் ஒரே தடவையில் சித்தியடையவில்லை எனின், அதற்குரிய போதனா
ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?
குடாநாட்டு கல்வி வீழ்ச்சி அடைவதை ஆராய்வதற்கு ஜேர்மனியில்
இருந்து வெளிநாட்டவர் வந்ததைப்போல் பல்கலைக்கழக கல்வித்தர
வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று அறிய வெளிநாட்டில் இருந்து
யாரையாவது எதிர்பார்க்கிறார்களா?
2. யாழ் பல்கலைக்கழகத்தினை இலங்கையில் உள்ள மற்றைய
பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அந்த மாணவர்கள்
அனுபவிக்கும் பெரும்பாலான வசதிகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்
அனுபவிப்பதில்லை.
கணினி வசதிகள் இதுவரை காலமும் இல்லை (சமாதான சூழ்நிலை உருவாகி
பல மாதங்களாகியும் தற்போது தான் நு}லகத்தில் பொருத்துவதற்காக
100 இற்கும் அதிகமான கணினிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.)
தங்களுடைய பதவிகளுக்காக அமைச்சர்களுக்கும், ஜனாதிபதிக்கும்
பின்னால் திரிபவர்கள் மாணவரின் நலன்களிலும் அக்கறை எடுப்பதும்
நன்று)
3. அநேகமான நாடுகளில் பல்கலைக்கழகத்தில் தான் சமுதாயத்திற்கு
தேவையான பல விடயங்களை ஆராய்கின்றார்கள். அதன் மூலம்
கண்டுபிடிப்புகள் செய்கிறார்கள். ஆனால் யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்தின் நிலை வேறு அதாவது யப்பானிய மொழிக்கும்
தமிழுக்கும் என்ன தொடர்பு அது இது என்று ஆராய்வார்கள்.
வெளிநாடுகளில் வசிக்கும் எம் சகோதரர்களின் தமிழ் மொழி
வளர்ச்சிக்கு ஏதாவது ஆராய்ச்சி செய்தார்களா? அல்லது ஏதாவது கண்டு
பிடித்தார்களா?
4. முன்னைய துணைவேந்தரால் புதிய புதிய கற்ககைநெறிகள் (இலங்கையின்
ஏனைய பல்கலைக்கழகங்களில் இல்லாத) ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுள் 1.
மீன்பிடியியல் டிப்ளோமா (தற்போது பட்டப்படிப்பாக
மாற்றப்பட்டுள்ளது) 2. சித்திரமும் வடிவமைப்பும் (முதலாவது அணி
வெளியேறியுள்ளது இதுவும் பட்டப்படிப்பு) 3. உடற்கல்வியில்
டிப்ளோமா (பிசிக்கல் எடியுக்கேசன்) ஒரு வருட டிப்ளோமா கற்கைநெறி.
இக்கற்கை நெறியில் இது வரை 300 மாணவர்கள் பட்டம் பெற்று
வெளியேறியுள்ளனர். இவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் இன்னும்
வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.
மேலும் இக்கற்கை நெறி தற்போது இரண்டு வருடங்களாக
மாற்றப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு மூன்று வருட பட்டப்படிப்பாக
மாற்றப்படவுள்ளது. (ஒரு ஆண்டுக்கு 7,500 வரை கட்டணம்
யாழ்பல்கலைக்கழகத்தால் அறவிடப்படுகின்றது. ஒரு மாணவனுக்கு மொத்த
செலவாக 40,000 தொடக்கம் 50,000 ரூபா வரை வருடம் ஒன்றிக்கு
செலவாகின்றது.) பாடசாலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு
பற்றாக்குறை இருந்தும் இவர்கள் எவருக்கும் இது வரை நியமனங்கள்
வழங்கப்படவில்லை. இதற்கு கல்வித்திணைக்களம் சொல்லும் காரணம்
அவதானிக்கவேண்டிய தொன்றாகும். அதாவது தங்களுக்கு கல்வி அமைச்சு
யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டும் கற்பிக்கப்படும் உடற்கல்வி
டிப்ளோமாவை கல்வித்தராதரமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும்?
இந்த இடத்தில் தான் சந்தேகமே தோன்றுகின்றது அதாவது யாழ்ப்பாணத்து
இளைஞர்கள் அநேகமானவர்கள் தாம் கற்கும் கல்வி தமக்கு தொழில்
வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்ற இலக்கிலேயே கல்வி கற்கின்றார்கள்.
யாழ் மாணவர்களின் எதிர்பார்ப்பு அறியாதவரா முன்னாள் துணைவேந்தர்?
ஏன் இவ்வாறான அரைகுறைக் கற்கைநெறிகளை யாழ் பல்கலைக்கழகத்தில்
மட்டும் ஆரம்பிக்க வேண்டும்? தனது சொந்த சிந்தனையில்
செயல்பட்டாரா? அல்லது மாற்றான் சிந்தனையில் செயல்பட்டாரா?
தன்னுடைய காலத்தில் தொடக்கப்பட்ட கல்வி மாற்றங்களுக்கு விளக்கம்
சொல்வாரா முன்னாள் துணைவேந்தர்..?
பல்கலைக்கழகத்தினுள் இன்னும் சில பேராசியர்கள் நேர்மையானவர்களாக
இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் குரல்கள் வெளியில் கேட்காமல்
தடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
விஞ்ஞான பீடத்தின் அதிபதி ஒருவரே கடந்த பல்கலைக்கழக
உபவேந்தருக்கான போட்டியில் அதிக வாக்குகளால் வென்றவர். அவருடைய
நேர்மையான வாழ்வைப்பற்றி குடாநாட்டில் உள்ள கல்விசார் சமூகம்
அனைவரும் அறிவர். மேற்படி பேராசிரியரை ஆசிரியராக கொண்டு
வெளிவந்த பத்திரிகை இந்து சாதனம். ஆனால் குடாநாட்டின் பிரபல
பத்திரிகை ஒன்றில் முகாமையாளராக பணிபுரியும் முன்னை நாள்
கல்லு}ரி அதிபர் அவர்கள் பேராசியருக்கு எதிராக ஊழல்
குற்றச்சாட்டு சுமத்தி அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியை
தனதாக்கிக்கொண்டார்!
அப்பேராசிரியர் தொடர்ந்து இந்து சாதனத்தின் ஆசிரியராக இருந்தால்
உண்மைகள் ஏதாவது வெளிவரலாம் என்ற அச்ச உணர்வின் காரணமாக
செய்யப்பட்ட அரசியல் நடவடிக்கையாகவே கருத இடமளிக்கின்றது?
வெளிநாட்டு உளவுப்படையால் செய்து முடிக்கப்பட்ட செயற்பாடுகளை ஒரே
பார்வையில் பார்த்தால் இந்தியப் புலனாய்வு அமைப்பில் இருந்த உயர்
அதிகாரி ஒருவரை பல வருடமாகப் பயன்படுத்தி இலங்கை உள்ளிட்ட
இந்தியாவின் அயல் நாடுகளைப் பற்றி இந்தியப் புலனாய்வாளர்களால்
பெறப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட வெளிநாடு பெற்றுக்கொண்டமை.
சில செய்தியாளருக்கும், அரச உயர் அதிகாரிகளுக்கும், சமய
நிறுவனங்களைச் சார்ந்தவர்களுக்கும் உயர் கௌரவங்களை வழங்கி
பெருமைப்படுத்துவதன் மூலம் தமக்கு எதிராக இருக்கும் உணர்வை
மாற்றி அந்த அதிகாரிகளிடையே ஒரு நட்பை வளர்த்துக்கொள்வது! இதனால்
தாம் செய்யப்போகும் காரியங்களுக்கு அவர்களால் வரக்கூடிய தடைகளை
முன்கூட்டியே தடுப்பது அத்தோடு அவர்களின் ஆசீர்வாதங்களுடன் சில
வேலைகளைச் செய்துகொள்வது.
தமது நாட்டில் உயர்படிப்பு, பட்டங்கள் பெற வாய்ப்பளிப்பது. தமது
நேரடி உதவிகள் மூலம் சமூக அமைப்புக்களை, தனிநபர்களை தமக்கு
விசுவாசமாக செயற்பட வைப்பது போன்ற வேலைகளை தமிழர் பிரதேசங்களில்
காணக்கூடியதாக இருக்கின்றது. புனர்வாழ்வுப் பணிகள் புலிகள் ஊடாக
மட்டும் இடம்பெற்றால் தமது வேலைகளை செய்ய முடியாது போகும் என்ற
காரணமும் சிரான் என்கின்ற புனர்வாழ்வு அமைப்பு செயல் இழப்பதற்கு
ஒரு காரணமாகும்.
விடுதலைப்புலிகள் அல்லாத அமைப்பினரால் குடாநாட்டில் அல்லது
தமிழர் பிரதேசங்களில் நடைபெறுகின்ற நடவடிக்கைகள் அனேகமானவை
தமிழர்களின் நலனில் மட்டும் அக்கறை கொண்டு செய்யப்படுவதாக கருத
முடியாது. அவற்றை வேண்டாம் என்று ஒதுக்குவதால் தமிழர்களுக்கு
அவப்பெயரே உருவாகும். அதனால் மக்கள் விழிப்பாக இருப்பதே சிறந்த
முடிவு !
இக்கட்டுரை மூலம் தெரிந்த பல தகவல்கள் அதனோடு தொடர்புடைய சில
நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருப்பது, குறிப்பிட்ட சிலருக்கு
கசப்புணர்வையே வெளிப்படுத்தும். கோபமுற்று என்னுடைய உயிருக்கு
அல்லது உடமைக்கு சேதம் ஏற்படுத்த அவர்கள் முனையலாம். அவ்வாறு
நடந்தால் என்னுடைய பேனா தொடர்ந்து எழுதாது. ஆனாலும் இந்த உலகில்
உள்ள நிரந்தரமானதும், தடுக்க முடியாததுமான மரணத்தை தழுவி
என்னுடைய ஆன்மா விடுதலை அடையும் அதேவேளை என்னுடைய ஆன்மா இந்த
உலகில் வாழும் மக்களின் ஆன்ம விடிவுக்காக பிரார்த்திக்கும்!
(பாகம்01
பாகம்02) |