|
1998 ல் கணையாழி என்ற சஞ்சிகையின் ஜனவரி இதழில் வெளiயான பெண்கள்
பற்றிய ஒரு கட்டுரையில் இடம் பெற்ற விஷயங்களை அடிப்படையாகக்
கொண்டு பின்வரும் பகுதியை அமைத்துள்ளேன். தமிழ்ச் சமூகம் ஆரம்ப
காலத்தில் தாய்வழி அமைப்பாக இருந்து காலப்போக்கில் ஏற்பட்ட
ஆரியச் செல்வாக்கால் தந்தை வழிச் சமூக அமைப்பாக மாறியது. தாய்
வழிச் சமூக அமைப்பில் பெண்ணைச் சுற்றியே குடும்ப அமைப்பு
இருந்ததால், தாய் குடும்பத் தலைவியாக இருந்து சகல முடிவுகளையும்
எடுக்கும் சுதந்திரத்தைப் பெற்றிருந்தாள்.
பின்னர் ஏற்பட்ட
ஆரியச் செல்வாக்கால் தந்தையை மத்தியாகக் கொண்டு குடும்பம்
அமையும் முறை தலையெடுத்தது. இதனால் பெண்ணின் நிலை பெரிய
மாற்றங்களுக்குட்பட்டது. கணவனுக்குப் பல விதங்களiல் சேவை செய்வது,
குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்ப்பது போன்றவை மட்டுமே பெண்ணின்
வேலையென்றானது. சமயக்கிரியைகளiல் கணவனுடன் பங்கெடுக்கும் உரிமை
அவளுக்கு இருந்த போதும் அவள் தனியாக அவற்றை நடத்தும் உரிமை
இருக்கவில்லை.
காலம் மாற மாற சமூக கட்டமைப்பு மாறிய போதும்
பெண்ணின் வேலைகளiல் மாற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாக கல்வி,
சமூக உற்பத்தி, பொது வேலைகள், அரசியல், மற்றும்
நிர்வாகத்திலிருந்து பெண் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டாள்.
அத்துடன் ஆணின் தயவிலேயே வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
பெண் இப்படி வாழ்வதுதான் முறை என்றும் சமூக ஒழுங்கைக்
காப்பாற்றத் தேவையான அடிப்படை இதுவே என்றும் சமூகத்தின்
கருத்துக் கட்டமைக்கப்பட்டது.
தனிச் சொத்துடமை உருவாக, குடும்பச் சொத்து சரியான வாரிசுக்கு
மாற்றப்பட வேண்டுமென்பதால், பெண்ணின் கற்பு அதிகமாக
வற்புறுத்தப்பட்டது. கற்புடைய பெண்ணின் கழுத்தில் முத்து வளரும்
என்றும், அவளால் இயற்கையைக் கூட கட்டுப்படுத்த முடியும் என்றும்
இன்னும் பற்பல அற்புதங்களைச் சாதிக்க முடியும் என்றும் கதைகள்
கட்டப்பட்டன. ஒரு பெண் ஒரு ஆணுடன் மட்டுமே வாழவேண்டும் என்றும்
அவனது மறைவுக்குப் பின் அவள் விதவா நோன்பு பூண்டு பிள்ளைகளை
வளர்க்கும் பொறுப்பை மட்டும் ஏற்று நிறமற்ற அல்லது ஒரு ஆழகற்ற
ஒரு வாழ்க்கையை வாழவேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.
அதற்கும் அடிப்படைக் காரணம் சொத்துப் பரிமாற்றமே.
எனவே பெண்ணைப்
பற்றிய கருத்து உருவாக்கத்துக்குத் தனியுடமைச் சொத்து வழி
வழியாக ஆணின் சந்ததிக்குப் போகவேண்டும் என்பதே காரணமாக அமைந்தது.
அவள் வீட்டை விட்டு வெளiயே போனால் அவளது கற்புக்கு பங்கம் அல்லது
அவளது மனதில் மாற்றம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அவள்
வீட்டுக்குள் முடக்கப்பட்டாள்.
ஜனநாயக இயக்கங்களiன் குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கிய பின்னர்
மக்கள் திரளiல் சரி பாதியான பெண்ணை வீட்டுக்குள் முடக்கி வைப்பது
சரியல்ல என்ற கண்டனங்கள் எழுந்தன. பொதுவுடமை இயக்கங்களும்,
பெண்கள் அமைப்புக்களும், பல்வேறு ஜனநாயக இயக்கங்களும், தந்தை
பெரியார், மகாத்மா காந்தி, பூலே, நாராயணகுரு போன்ற சமூகச்
சீர்திருத்தவாதிகளும் முனைப்புடன் போராடியதன் விளைவாக பெண்கள்
தொடர்பாகச் சில மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களுக்கு வாக்குரிமை,
இருதார மணத்தடை, குழந்தை மணத்தடை, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்
கல்வி, பெண்களுக்கு வேலை வாய்ப்பு என்பன அவற்றிற் சில.
பெண்கள் முன்னேற்றத்திற்கும் பெண் விடுதலைக்கும் இந்த மாற்றங்கள்
முன் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாத போதும் உண்மையான பெண்
விடுதலைக்கு இவற்றிற்கு மேலாக தீவிரமான ஆழமான மாற்றங்கள் தேவை
என மேற்குலகப் பெண்ணியல்வாதிகள் கோருகின்றனர். அவர்களது
கோரிக்கைகளiல் சில இதோ-
பெண் அன்பு செய்பவள், பலவீனமானவள், ஆணின் பாதுகாப்பில் முழுமை
அடைபவள் என்பதற்கெல்லாம் அறிவியல் அடிப்படை இல்லை.பெண்மை ஆண்மை என்பதெல்லாம் வெறும் புனைவுகளே இவற்றை உடைக்க
வேண்டும்.
குடும்பம் தனிமனிதனின் படைப்புத் திறனை விலங்கிட்டுச்
சிறையிடுகிறது. குடும்ப உறுப்பினர்களை அடங்கிப் போகப்
பழக்குகிறது. போராடாதவர்களாக மாற்றுகிறது. சமூக
அக்கறையற்றவர்களாக மாற்றுகிறது. அவர்களது எல்லைகளைக்
குறுக்குகிறது. மொத்தத்தில் ஒரு ஒடுக்குமுறைக் களமாக இயங்குகிறது.
ஆகவே இந்தக் குடும்ப அமைப்பைச் சிதைக்க வேண்டும்.
பாலியல் ஒடுக்கு முறைகளை எதிர்க்கவேண்டும்.பெண், திருமணம் மற்றும் குடும்ப அமைப்பிலிருந்து தன்னை முற்றாக
விடுவித்துக் கொள்ளவேண்டும்.கருக் கலைப்பைச் சாதாரண சமூக நிகழ்வாக்க வேண்டும்.
பெண்மை எனக் குறிக்கப்பட்டிருக்கும் வரையறைகள் பெண்ணை
ஒடுக்குவதற்காக பாலாதிக்கச் சமூகம் உருவாக்கியவை. இவற்றை மீற
வேண்டும்.மரபு வழியிலான உணவு முறை பெண்களை அடுப்படியிலேயே கட்டிப் போட்டு
விடுகிறது. ஆகவே இதைத் தவிர்த்து எளiய தயாரிப்பை மேற்கொள்ள
வேண்டும். உணவுத் தயாரிப்பை இருபாலார்க்குமான செயலாக ஆக்க
வேண்டும்.
பெண் நேரடி உற்பத்தியில் ஈடுபட வேண்டும். பொருளாதார ரீதியாக
ஆணைச் சார்ந்திருத்தலை ஒழிக்க வேண்டும்.பெண் அழகுபடுத்துவதற்கும் அலங்கரிப்பதற்கும் உட்பட்டவளல்ல.பெண் தனக்கான மொழி, பார்வை, வாசிப்பு, எழுத்து, பாலியல்
ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.
அரசியல் செயற்பாடுகளiலிருந்து பெண் ஒதுங்கியிருக்கக்கூடாது.ஆணின் ஊதியம் என்பது குடும்பத்தில் பெண் செய்யும் ஊழியத்திற்கும்
சேர்த்துத்தான் என்று ஆக்கப்பட்டு ஊதியத்திலான பங்கைப்
பெண்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.பெண்களுக்கான பிரத்தியேக வேலைகளை நீக்க வேண்டும்.
பெண்விடுதலையை முக்கிய நோக்கமாகக் கொண்டு இயங்குபவர்கள்
இக்கருத்துக்கள் பலவற்றோடு உடன்பட்ட போதும், குடும்ப அமைப்பை
உடைத்தல், பாலியல் சுதந்திரம் ஆகியவற்றை ஏற்க மறுக்கின்றனர்.
குடும்பம் அடிப்படையில் மனிதருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத்
தருகிறது. இதைச் சிதைத்தால் இந்தப் பாதுகாப்புணர்வு
மறைந்துவிடும். ஆகவே குடும்ப உணர்வைச் சிதைப்பது சரியல்ல. ஆனால்
குடும்ப அமைப்பில் ஜனநாயகத்தை வற்புறுத்தலாம் என்கின்றனர்.
பாலியல் சுதந்திரம் கட்டற்ற உறவிலும், அதிக பட்ச சீரழிவிலும்
சமூகத்தைத் தள்ளiவீடும் என்கின்றனர்.
இவை அனைத்தையும் கருத்தில் எடுத்துக்கொண்டால், சமூகத்திலும்
வேலைத் தலத்திலும், குடும்பத்திலும் பெண் ஒடுக்கு முறை மற்றும்
சுரண்டல் பற்றிய பெண்களiன் உணர்வு நிலைகளும் அவற்றை
மாற்றுவதற்காக பெண்களும் ஆண்களும் எடுக்கும் உணர்வு பூர்வமான
நடவடிக்கைகளும் பெண்ணியத்தின் பரந்துபட்ட செயற்பாடுகள் எனலாம்.
இருபதாம் நூற்றாண்டு வரை உலகம் முழுவதிலும் பெண்களுக்கு பல
உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமானது வாக்குரிமை.
உலகத்திலேயே முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளiத்த நாடு
நியூசிலாந்தே. 1893ல் அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. ஆனால்
அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் 1919இலேயே போட்டியிட முடிந்தது.
அவுஸ்திரேலிய பெண்கள் 1902 இல் வாக்குரிமையும் பாராளுமன்றத்
தேர்தலில் போட்டியிடும் உரிமையையும் பெற்றனர்.
1906 ல் பெண்களுக்கு வாக்குரிமை அளiத்ததுடன் உலகத்திலேயே முதலில்
பெண்ணைத் தேர்தல் மூலம் தெரிவு செய்த நாடு பின்லாந்து. இது நடை
பெற்றது 1907 ஆம் ஆண்டில். பிரித்தானியாவில் 1918 ல் ஒரு பெண்
பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்காவில்
உள்ள பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கு 1920ம் ஆண்டு வரை
காத்திருக்க வேண்டியதாயிற்று. சோவியத் ரஷ்யாவில் 1918ல்
பெண்களுக்கு வாக்குரிமை அளiக்கப்பட்ட போதும் அரசாங்கத்துக்கு ஒரு
பெண்ணைத் தெரிவு செய்ய 74 வருடங்கள் ஆயிற்று. இன்று வரை
அவுஸ்திரேலியாவிலோ அமெரிக்காவிலோ ஒரு பெண் நாட்டின் தலைமைப்
பதவியை ஏற்க முடியவில்லை. |