www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... - 3(1)(2)(3)(4)
-சந்திரலேகா வாமதேவா(மூலம்:உயிர்ப்பு)

சீனாவின் பல பகுதிகளiல் இன்று வரை பெண்கள் நிலை அதிகம் மாறவில்லை என்கிறது சீனாவின் நல்ல பெண்கள் (The Good Women of China) என்ற நூல். Xinran Xue என்ற சீனப் பெண்ணால் எழுதப்பட்டு அதிகம் விற்பனை செய்யப்பட்ட இந்நூலுக்காக 8 வருடங்களாக 200 சீனப் பெண்கள் நேர்காணப்பட்டனர். அவர்கள் கூறிய கதைகளiல் 12 கதைகள் இந்நூலுக்காகத் தெரிவு செய்யப்பட்டன. பல நூற்றாண்டு காலமாக தந்தையராலும் கணவன்மாராலும் மகன்களாலும் அடக்கு முறைக்குட்படுத்தப்பட்ட பெண்கள் வெளiப்படையாகத் தமது கஷ்டங்களைக் கூறுவதற்கே அஞ்சினர்.

 அவர்களுக்கு தமது துயரங்களையோ, உணர்வுகளையோ உடலின் அசைவுகளாலோ (body language) வாய் மொழியாலோ தெரிவிப்பதற்கு உரிமையிருக்கவில்லை. அவர்கள் பலவந்தமான திருமணங்கள், பாலியல் வல்லுறவுகள், குழந்தையை தவறான முறையில் நடத்துதல் அவர்களைப் புறக்கணித்தல் போன்றனவற்றால் பெரிதும் அவலத்துக்குள்ளாகினர். தனது நூலுக்காக பல பெண்களை நேர்கண்ட இந்நூலாசிரியை பெண்கள் பற்றி இரு தொகுதி பெறுமதிகள் உள்ளன என்றும் அவை பழைய புதிய தலைமுறையினரிடையே வேறுபடுத்தப்பட்டுள்ளன என்றும் கூறுகிறார்.

பழைய தலைமுறையினர் ஒரு பெண் ஆண் குழந்தையைப் பெற்றால், அழகாக இருந்தால், வீட்டு வேலைகளை நல்ல முறையில் செய்வாளாயின் அவளே நல்ல பெண் என்று கருதினர். இளைய தலைமுறையினர் கல்வி கற்றவர் எனவே அவர்களது கணிப்பில் பெண் புத்திசாலியாக இருப்பது மிக அவசியம். அத்துடன் அழகும் ஒரு பெண்ணுக்குத் தேவை என்று கருதினர். பெண் வீட்டு வேலைகளைச் செய்தாலென்ன செய்யாவிட்டாலென்ன அதை கருத்தில் எடுக்கத் தேவையில்லை என்பது அவர்களது வாதம்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெண்ணில் தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த அடக்குமுறையை கண்டு கொதித்தெழுந்த கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால் பின்னிந்த உலகினில் வாழ்க்கையில்லை, என்றும் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் என்றும் பாரதி பெண்கள் அடிமைப்பட்டிருந்ததையும் அவர்களது முன்னேற்றம் அவசியம் என்பதையும் குறிப்பிடுகிறான். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் எவர்க்கும் அஞ்சாத திண்மையும் திமிர்ந்த ஞானச் செருக்கும் உள்ள புதுமைப் பெண்ணை அவன் கற்பனை செய்கிறான்.

பாரதிதாசன் யாவற்றையும் வெளiப்படையாகக் கூறும் கவிஞன். பெண்விடுதலையின் அவசியத்தையும், கைமைக் கொடுமையையும் மூட மணத்தையும் அவர் பின்வருமாறு கண்டிக்கிறார்.

கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்
புல்லென்றே நினைக்கிறீர் மனைவிமாரைப்
புருஷர்களiன் உபயோகம் பெரிதென் கிறீர்
----------------பெண் ஆண் என்ற
இரண்டுருளையால் நடக்கும் இன்ப வாழ்க்கை.

கைம்மை எனக் கூறி-அப்பெரும்
கையினிற் கூர் வேலால்
நம்மினப் பெண்குலத்தின்-இதய
நடுவினிற் பாய்ச்சுகிறோம்.

குறட்டை விட்டுக் கண்கள் குழிந்து
நரைத்தலை சோர்ந்து நல்லுடல் எலும்பாய்ச்
சொந்த மருகக் கிழவன் தூங்கினான்.
இளமை ததும்ப எழிலும் ததும்ப
காதல் ததும்பக் கண்ணீர் ததும்பி
என் மகள் கிழவனருகில் இருந்தாள்.

வல்லமை பேசியுன் வீட்டில்-பெண்
வாங்கவே வந்திருவார்கள் சிலபேர்கள்
நல்ல விலை பேசுவார்-உன்னை
நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்
கல்லென உன்னை மதிப்பார் - கண்ணில்
கலியாண மாப்பிள்ளை தன்னையுங் காட்டார்.
வல்லி உனக்கொரு நீதி-இந்த
வஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்
--
---
கற்றவளே ஒன்று சொல்வேன் -உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்

கவிஞர்கள் கண்ட கனவு பொய்க்கவில்லை. பெண்கள் சகல துறைகளiலும் முன்னேறி ஆண்களுக்குச் சமமாக இயங்குகிறார்கள். ஆயினும் பெண்ணைப் பற்றிய சில கருத்துகள் இன்னும் மாறவில்லை. அதனால் பெண்ணிய வாதிகள் என்னும் அதற்காகப் போராடி வருகிறார்கள்.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]