நட்பு எல்லைகள் இன மதங்கள் கடந்தது.வயது வேறுபாடு
அற்றது.இணையத்தின்மூலமாக இந்த நட்பானது எந்தளவுக்கு
இலகுவானதாக்கப்படடிருக்கின்றது என்பது நாம் அறிந்ததே.ஆயினும்
இணையம் தவறான வகையில் பயன்படுத்தப்பட்டு இணையநட்பு என்றால்
சமூகத்தினால் வித்தியாசமாக நோக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது
என்றால் மிகையாகாது.இதற்குத்தீர்வு முக்கியமாக
இணையப்பாவனையாளர்களினால் தான் வழங்கப்படமுடியும்.எம்மால்
ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் இணைய உறவுகள் பகுதியினை
தயவுசெய்து உங்கள் நட்பை வளர்க்கும் மையமாக மட்டும் பயன்படுத்த
வேண்டுகின்றோம்.