|
புதிதாக பரவிவரும் கணினி
வைரஸ்
(07-05-2004)
குயின்ரஸ்
துரைசிங்கம்,ரொறன்ரோ - கனடா(மூலம்:தமிழ்நாதம்) |
|
வின்டோஸ் இயக்கியைப் பாவிக்கும்
கணினியை உபயோகிக்கும் அனைவருக்கும், குறிப்பாக ஒன்றிற்கு
மேற்பட்ட கணினிகளை, நெட்வேர்க் அமைப்பில் இயக்கும்
நிறுவனங்களுக்கு, மைக்ரோசொவ்ட் நிறுவனம் விடுத்துள்ள
அவசர அறிவித்தலில், புதிதாக பரவிவரும் மிக மோசமான இந்த
வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
|
|
தாயகத்தில் புதிய
தொழில்நுட்பங்களின் பிரவேசம் |
|
இலங்கைத்தமிழர்களின்
கலாச்சாரத்தலைநகரமாக கொள்ளப்படுகின்ற யாழ்மாவட்டத்தில்
இணையப்பாவனை அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றது.நீண்ட
கொடிய யுத்தம்காரணமாக கணினிப்பாவனை என்பது
குதிரைக்கொம்பு என்ற நிலை மாறி தற்போது வெகுவேகமாக
கணினிப்பாவனையும் அதிகரித்து வருகின்றது.
சாதரணமாக தொலைத்தொடர்பு என்பது
இங்குள்ள மக்களுக்கு சிரமம் என்ற நிலைமாறி கம்பியூடான
தொலைத்தொடர்பில் தங்கி இராமல் கம்பியில்லா
தொலைத்தொடர்பு முன்னேற்றம் கண்டுவருகின்றது.தகவல்
தொழில்நுட்பத்தின் உச்ச பிரதிநிதியான
இணையத்தைப்பயன்படுத்துவதற்கான நிலையங்கள் அதிகரித்து
வருகின்றன.இந்தவகையில் செய்மதியூடான
கம்பியில்லாத்தொடர்பிலமைந்த இணையப்பாவனை நிலையம் ஒன்று
Focus Net Cafe & Game zone
என்ற பெயரில்
120,அரசடிவீதியில்
ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.இவ்வாறான புதிய வரவுகள்
யுத்தத்தின் பிடியில் இருந்து மீள முயலும்
யாழ்மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம் |
|
|
|
|
HOT
NEWS |
|
|
|
|
Questions /News
|
|
|