www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page  

கிறீன் காட் விஸா 2006 (DV - 2006)

வருடந்தோறும் அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படும்55,000பேருக்கான கிறீன்காட் விசாவுக்குரிய விண்ணப்பங்கள் இம்முறை இணையத்தின்மூலமாகவே ஏற்றுக்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் இந்த அதிர்ஸ்ட தெரிவு விஸா வழங்கல்மூலம் 55,000 ேபருக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுவருவது யாவரும் அறிந்ததே.இதற்காக வருட இறுதிப்பகுதியில் குறித்த காலப்பகுதியில் மாத்திரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிஸ்டம் பார்க்கப்படுவதே வழக்கம்் சென்ற மறை தொடக்கம் இதற்கென உருவாக்கப்பட்டிருக்கம் இணையத்தின்மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

முன்பிருந்த நடைமுறையின்போது தபால்மூலமே அனுப்பவேண்டியிருந்ததால் குறித்த காலப்பகுதியில் விண்ணப்பங்கள் சென்றடைவதனை உறுதிப்படுத்துவது சில நாட்டினருக்குக் கடினமாக இருந்தது.இதனைப் பயன்படுத்தி பல்வேறு இணைத்தளங்களும் நிறுவனங்களும் விண்ணப்பதாரிகளிடமிருந்து குறித்த தொகையினை அறவிட்டு பின்னர் அவர்களுடைய விண்ணப்பங்களை குறித்த காலப்பகுதியில் அனுப்பிவைக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுவந்தன.சில விண்ணப்பதாரிகள் இவ்வாறானவர்களின் முகவரிகளே சென்றடையவேண்டிய உண்மையான முகவரி என தவறாக அர்த்தம் கொண்டு அவர்களிடம் அனுப்பிவிட்டு ஏமாந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த விசாவுக்குரிய விண்ணப்பத்திற்கு எதுவித கட்டணமும்அமெரிக்க அரசாங்கத்தினால் அறவிடப்படுவதில்லை.ஆயினும் கடந்த காலங்களில் பல விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை நிரப்புவதில் இருந்த தெளிவான அறிவின்மை விஸா விண்ணப்பத்துக்கான நடைமுறைகளில் இவர்களிற்கு இருந்த தெளிவின்மை காரணமாகவும்,இவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.இங்கு ஒன்றைக் குறிப்பிடவேண்டும்.இந்த விஸாவுக்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணத்தில் 50ரூபாவரையிலும் கொழும்பில் 25ரூபா வரையிலும் விற்பனையாகிக்கொண்டிருந்தன.எனினும் இவை புகைப்படப்பிரதிகளாகவே இருக்கின்றன.

இம்முறைகூட பத்திரிகைகளில் மேற்குறிப்பிட்ட சில நிறுவனங்கள் விளம்பரங்கள் பிரசுரிக்கத்தொடங்கிவிட்டன. எது எவ்வாறாயினும் தபால்மூலம் கடதாசி விண்ணப்பத்தில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதென அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பத்திரிகைச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

நவம்பர் 05தொடக்கம் அடுத்த வருடம் சனவரி 7 வரையுள்ள நாட்களில் ஏதாவது ஒரு நாளில் அந்நாட்களில் மட்டும் பிரசன்னமாயிருக்கும் இணைத்தளமான www.dvlottery.state.gov என்ற தளத்துக்குச்சென்று விண்ணப்பத்தினைப் பூர்த்திசெய்து புகைப்படத்தின் scanசெய்யப்பட்ட கணினிப் படத்தினை(ComputerImage)யும் அதனுடன் இணைத்து அனுப்புவதன்மூலம் விண்ணப்பதாரிகள் விஸாவுக்குரிய அதிஸ்ட சீட்டிழுப்பில் கலந்துகொள்ள முடியும்.புகைப்படங்களின் scanசெய்யப்பட்ட fileகொண்டிருக்கவேண்டிய இயல்புகள் பற்றியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே இம்முறை விஸாவுக்கு விண்ணப்பிக்க ஓரளவு இணைய அறிவு அல்லது அவ்வாறானவர்களின் உதவி விண்ணப்பதாரிகளுக்கு அவசியம்.விண்ணப்பம் பூர்த்திசெய்யப்பட்ட குறித்த புகைப்படம் சேர்க்கப்பட்ட பின்னர் ஒரு பொத்தானை அழுத்தியதும் அதே கணத்தில் அவ்விண்ணப்பம் உரிய இடத்தினை சென்றடைந்துவிடும்.அங்கிருந்து உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்ற பதில் கிடைக்கும்.ஒருவருக்காக யாரும் விண்ணப்பத்தை அனுப்பமுடியும்.ஏனெனில் இங்கு கையொப்பம் கேட்கப்படவில்லை.எனினும் ஒருவரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்படின் அவை அனைத்தும் நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இக்கட்டுரை அமெரிக்காவுக்கு குடிபெயர்வதை ஊக்குவிக்குமுகமாக எழுதப்படவில்லை.மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே எழுதப்பட்டிருக்கின்றது.பரீட்சை முடிவுகள் பார்ப்பதற்கு இணையப்பாவனை நிலையங்கள் குறித்த கட்டணங்கள் அறவிடுவதுண்டு.அதுபோல் இதற்கும் கடடணங்கள் அறவிடக்கூடும்.சில நிறுவனங்கள் இன்னும் தபால் நடைமுறைபற்றி விளம்பரம் செய்கின்றன.எனவே இவை எல்லாவற்றையும் சமாளிப்பதற்காக விண்ணப்பிக்கவிரும்பும் விண்ணப்பதாரிகளுக்கு தெளிவுபடுத்தும் முகமாவே இக்கட்டுரை வரையப்படுகிறது.

-தவா

All rights Reserved for Webtamilan.com© (2002-2004) [Used Font is Unicode]