www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

விடைபெற்ற இடிஅமீன்

20ஆம் நு}ற்றாண்டின் மோசமான சர்வாதிகாரிகளில் இடிஅமீன் (80) மறக்க முடியாதவர். உகண்டாவில் அவரது ஆட்சிக்காலத்தில் பழங்குடிமக்களை பழிதீர்த்த கோரச்சம்பவங்களை நினைத்தால் இன்றைய தலைமுறையினரையும் குலைநடுங்கவைக்கும். பதவிவகித்த எட்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 5 லட்சம் பேரை அவர் கொன்றிருந்தார்.

1896இல் பிரிட்டன் உகண்டாவைக் கைப்பற்றியது. அதைச்சுற்றியிருந்த அரசுகளையும் அதனுடன் சேர்த்து பிரிட்டன் தனது ஆட்சிக்குக்கீழ்கொண்டுவந்தது. 1914 இல் அதற்கான எல்லைகளும் வகுக்கப்பட்டன. அதன் பின்னர் 1962 இல் அமைதியான முறையில் உகண்டாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது.ஆனால், நாட்டின் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் நாடு அமைதி இல்லாமல் இருந்தது. பிரதமர் மில்டன் ஒபோடே, புதிய அரசமைப்பை வகுத்து அதற்கு தானே அதிபர் என்று பிரகடனம் செய்துகொண்டார். அதன்படி நாட்டில் ஆங்காங்கு இருந்த குட்டி மன்னர்கள் அதிகாரம் இழந்தனர். இனப்பிரச்சினை தலைதூக்கியது. 1971 இல் ராணுவப் புரட்சி மூலம் இடி அமீன் உகண்டாவில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இடிஅமீன் 1925 இல் பிறந்தார். உகண்டாவில் கொபேகோ எனும் இடத்தில்காக்கவா பழங்குடி இனத்தில் அவர் பிறந்தார். இந்த இடம் கொங்கோவுக்கும் சூhனுக்கும் அருகில் உள்ளது. இடிஅமீனை பராமரிக்க அவரது தந்தை மறுத்துவிட்டார். இதனால் தாயாரிடம் அவர் வளர்ந்தார். பிரிட்டிஷ் படையான ஆபிரிக்கன் ரைபிள்ஸ் படையில் சேர்ந்து சேவகம் புரிந்தார். இளம் வயதிலேயே முஸ்லிம்மதத்துக்கு இடிஅமீன் மாறினார். 1952 - 56 இல் கென்யாவில் "மாவ் மாவ்" புரட்சியை ஒடுக்கச்சென்ற பிரிட்டிஷ் இராணுவத்தில் அவர் ஆபிரிக்கன் ரைபிள்ஸ் படைசார்பில் பங்கேற்றார். அப்போது அவர் சிறப்பாகப் பணிபுரிந்ததால் மகிழ்ந்த பிரிட்டிஷ் அரசு அவருக்கு லெப்டினன்ட் பதவி வழங்கியது.

உகண்டாவைச்சேர்ந்த உள்ளுர் படையினரில் லெப்டினன்ட் ஆனோர் இருவர் மட்டுமே. அவர்களில் இடிஅமீனும் ஒருவர்.இடிஅமீன் 1951இல் உகண்டாவின் அதிபாரக்குத்துச்சண்டைவீரர் ஆனார். 1960 வரை அந்த இடத்தை வேறுயாரும் அவரிடம் இருந்து மீட்கமுடியவில்லை.1962 இல் பிரதமர் மில்டன் ஒபோடேயுடன் ஒட்டிக்கொண்டு அவரது தீவிர ஆதரவாளர் ஆனார். இடிஅமீன் மீதான குற்றச்சாட்டுக்களை பிரதமர் கேள்வப்பட்ட போதும் தனது ஆதரவாளர் என்பதால் அவருக்கு படிப்படியாக பதவி உயர்வு அளித்தார். 1963இல் கேர்ணலாகவும் 1964இல் துணை கொமாண்டராகவும் இடிஅமீனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

1966 இல் பிரதமர் ஒபோடோவுக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.ஒபோடே அரசமைப்பை நிறுத்தி வைத்து அடிப்படை உரிமைகளை இல்லாமல் செய்தார். அப்படி இருந்தும் இடிஅமீன்ஒபோடேவுக்கு ஆதரவு தெரிவித்தார்.அதன்பின்பு புதிய அரசமைப்பை ஒபோடே ஏற்படுத்தி அதற்குத்தானே அதிபர் என்றும் அறிவித்தார்.இந்நேரத்தில் இடிஅமீன் இராணுவப்படை மற்றும் விமானப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.1970வரை இப்பதவியில் அவர் தொடர்ந்தார்.இராணுவத்துகு;கு தலைவரானவுடன் அவரது "காக்வ" பழங்குடி மக்களை இராணுவத்தில் புகுத்தினார்.தனக்கு ஆதரவு அளிக்கும் இளைஞர்களை முன்னுக்குக் கொண்டுவந்தார்.இதனால் அதிபர் ஒபோடேவுக்கும் இருவருக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கத்தொடங்கியது.

இராணுவத்தில் அமீனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர்.இதனால் ஒபோடே அவரை இரலணுவத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி நிர்வாகப்பதவிக்கு மாற்றினார்.1971இல் இராணுவ நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக தன்னைக் கைதுசெய்ய அரசு முயற்சிக்கிறது என்று இடிஅமீன் உணர்ந்தார். 1971 ஜனவரி 25இல் அதிபா ஒபோடே நாட்டில் இல்லாத சமயத்தில் உகண்டாவில் இராணுவப் புரட்சி மூலம் தனது ஆட்சியை அவர்நிறுவினார். (ஒபோடே காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அப்போது சிங்கப்பூர் சென்றிருந்தார்).

உகண்டாவுக்கு தானே அதிபர் என்றும் முப்படைகளுக்கு தானே தளபதி என்றும் இடிஅமீன் அறிவித்தார். ஒபோடேயின் இராணுவ ஆதரவாளர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இடிஅமீன் தூக்கிலிட்டார்.தன்னை உகண்டாவின் ஆயுட்கால அதிபர் என்று அறிவித்துக்கொண்டார். 1972இல் உகண்டாவில் வாழ்ந்த இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர் 50 ஆயிரம் பேரை நாட்டைவிட்டுத்துரத்தினார்.
அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் கடுமையான சவால்களை இடிஅமீன் விடுத்தார்.பாலஸ்தீனத்துக்கும் லிபியாவுக்கும் அவர் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். பாலஸ்தீனர்கள் இல்ரேல் விமானத்தைக் கடத்தியதில் நேரடியாக இடிஅமீன் அங்கு பங்குகொண்டார்.

இன ரீதியாக எதிரிகளை அழிக்க இடிஅமீன் முயற்சி மேற்கொண்டார். சிவில் சட்டத்தை விட இராணுவ சட்டம் அதிக அதிகாரம் படைத்ததாக அறிவிக்கப்பட்டது. படையினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. காக்வா இனத்தினர் தவிர பிற உகண்டா இனத்தினர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டனர்.இடிஅமீனின் கொடூரங்களுக்கு மூன்று இலட்சம் பேர் பலியாகிஇருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இராணுவ அதிகாரிகள் அரசுப் பணியில் நியமிக்கப்பட்டனர்.அமைச்சர்கள் இராணுவத்துக்கு கட்டுப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் உகண்டாவின் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி அழிவுப் பயணத்தைத் தொடங்கியது.

1978 இல் உள்நாட்டுக்குழப்பங்களை அவர் மறைப்பதற்காக தான்சானியா மீது தாக்குதல் தொடர்ந்தார்.இடிஅமீனினால் விரட்டப்பட்டதால் பயந்து தான்சானியாவில் தஞ்சம் புகுந்திருந்த உகாண்டா படையினர் தான்சானியா படையினருடன் இணைந்து உகண்டாவுக்குள் புகுந்தனர்.
1979 ஏப்ரல் முதலாம் திகதி இப்படையினர் உகண்டா தலைநகர் கம்பாலாவைக் கைப்பற்றினர்.இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று கருதிய இடிஅமீன் லிபியாவில் தஞ்சம் அடைந்தார். தங்சம் அடைவதற்கு முன்புவரை எதிரியாக நினைக்கும் மக்களை அழிப்பதிலேயே அவர் முழுக்கவனம் செலுத்தினார்.

லிபியாவிலிருந்து ஈராக்கிலும் இறுதியாக சவூதிஅரேபியாவிலும் அவர் தஞ்சம் அடைந்தார்.இடிஅமீன் முஸ்லிம் என்பதால் அவருக்கு இந்த நாடுகள் தஞ்சம் வழங்கின.சவூதிஅரேபிய அரசு இடிஅமீனின் மாதாந்தச்செலவுக்கு பெருந்தொகைப்பணத்தை அளித்தது. இதனால் அவர் தனது 4 மனைவிகளுடன் சந்தோஷமாக இருந்தார்.1989 இல் இடிஅமீன் மீண்டும் உகண்டாவுக்குத் திரும்ப முயற்சி செய்தார். ஆனால், கொங்கோவில் அவர் அடையாளம் காணப்பட்டு மீண்டும் சவூதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.2001இல் மீண்டும் உகண்டாவுக்கு திரும்பவேண்டும் என்று அவர் அளவுகடந்த ஆசையை மனதில் வைத்திருந்தார்.

லட்சக்கணக்கானோர் வாழ்க்கையை இருளாக்கிய இடிஅமீன் போன்ற சர்வாதிகாரி இனி பிறக்கக்கூடாது என்பதே உகண்டா மக்களின் இன்றைய ஆசை.இரத்தக்கொதிப்பு மற்றும் சிறுநீரகக்கோளாறால் பாதிக்கப்பட்ட இடிஅமீன், ஜுலை 18ஆம் திகதி ஜெட்டாவில் உள்ள கிங்பைசல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இடிஅமீன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]