|
முதல் பயணி: அடிக்கடி பெட்டி மாறிக்கிட்டே இருக்கீங்களே எதையாவது காணலையா?
இரண்டாவது பயணி: டிக்கெட்டைத்தான் காணலை.
இவர்: முளைச்சு மூணு இலை விடலை. அதுக்குள்ள அவள் செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா?
இவர்: செடியைப் பிடுங்கிப்போட்டுட்டான்.
தந்தை: ஏன்டா எல்லா பாடத்திலேயும் முட்டை வாங்கி இருக்கே?
மகன்: முட்டையில் ஏ விட்டமின் அதிகமாக இருக்குதுன்னு எங்க சார்தான் சொன்னாருப்பா.
நகரவாசி: உங்க பையனுக்கு ஏதாவது உருப்படியா சேவ் பண்ணியிருக்கீங்களா?
கிராமவாசி: ஒரு வயசுப்பையனுக்கு எங்க போயிசேவ் பண்றது. நான் தான் கோயிலுக்கு
போய் மொட்டை அடிச்சிட்டு வந்தேன்.
எமன்: என்ன இது? நரகமே காலியா கிடக்கிது. எல்லோரும் எங்கே போயிட்டாங்க?
சித்திரகுப்தன்: பூலோகத்துல எலெக்ஷன் ஓட்டுப்போட கிளம்பிட்டாங்க.
மனைவி: அந்த பிச்சைக்காரனுக்கு திமிரு அதிகமாயிருக்சு.
கணவன்: எப்படி சொல்றே?
மனைவி: சமைப்பது எப்படி?ங்கிற புத்தகத்தை கொடுத்துட்டு இனியாவது ருசியா
சமைங்கன்னு சொல்லிட்டுப் போறான்.
ஒருவர்: சைக்கிள் கடைக்காரர் படம் எடுக்கிறாராமே? படத்துக்கு என்ன பேரு
வெச்சிருக்கார்?
மற்றொருவர்:காத்தடிக்க நேரமில்லை.
ஆசிரியர்: மாதா, பிதா, குரு இவர்களில் யார் பெரியவர்?
மாணவன்: குருதான்.. அம்மா தாலாட்டுபாடினால் ஒரு குழந்தைதான் தூங்கமுடியும்.
ஆனால் நீங்க தாலாட்டு பாடினா 40 பேர் து}ங்கிறாங்களே!
ஒருவர்: நேத்து முடிஞ்ச போட்டிக்கு இன்னிக்கு அந்த ஓட்டப்பந்தய வீரர் பிராக்டீஸ்
பண்றாரு?
மற்றொருவர்: நேத்துபோட்டியில கலந்துகிட்டவர்தான் ஞாபகமறதியில இன்னும்
ஓடிக்கிட்டிருக்கார்.
ராஜா: பேக்கரிக்காரர் படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பார்..?
சேகர்: உன்னிடத்தில் பன் னைக்கொடுத்தேன் னு பெயர்வைப்பார்.
ஆசிரியர்: கவிஞர்கள் வர்ணிப்பது போல் நம் நாட்டில் தேனும் பாலும் பெருகி ஓடினால்
எப்படி இருக்கும்?
மாணவன்: எறும்புக்கடி தாங்கமுடியாது?
நடிகர்: சே... அரசியல்வாதி டைரக்டரா இருக்கிற படத்தில நடிக்கப்போனது தப்பா
போச்சு..
மனைவி: ஏன்?
நடிகர்: ஒவ்வொரு சீனையும் மேடைபோட்டு சொல்றாரு.
ராஜா: ஏண்டா...! பாவி தலையில் இவ்வளவு பெரிய கட்டு?
சேகர்: ஆபிசில் குட்டி தூக்கம் போட்டேன்னு சொல்றதுக்கு பதிலா வாய் உளறி ஒரு
குட்டிகூடது}க்கம் போட்டேன்னு சொல்லி தொலைச்சிட்டேன்.
ராஜா..???
நேர்ஸ்1: ஆனாலும் டாக்டருக்கு இவ்வளவு, அவநம்பிக்கை கூடாது?
நேர்ஸ்2: என்னாச்சு?
நேர்ஸ்1: ஒவ்வொரு முறையும் ஆபரேசன் பண்ணும்போது காசு சுண்டிப்போட்டுப்
பார்த்துட்டுத்தான் ஆபரேசனை பண்றாரு.
ஒருவன்: கல்யாண பந்தியில நான் பாதில எழுந்தும் நாலைந்து பேர் என்னை தொடர்ந்து
வந்துவிட்டார்கள்.
மற்றவன்: ஏன்?
ஒருவன்: அவங்க எல்லாம் புதுச்செருப்பு போட்டுக்கொண்டு வந்தவர்களாம்.
நிருபர்: நீங்க இசை அமைச்சு அத்தனை பாட்டும் ஹிட்டாகிட்டே வருது. இதுக்கு என்ன
காரணம்னு நீங்க நினைக்கிறீங்க?
இசையமைப்பாளர்: இன்னும் நான் சொந்தமா ட்யூன் போடாததுதான் பெரிய காரணம்.
பாபு: என்னது!... மனைவியை காணலைன்னு தெரிஞ்சவுடன் பேப்பரில விளம்பரம்
கொடுத்திட்டதா சொல்றியே. அவ்வளவு பாசமா...!
கோபு: நீ வேற! நான்கொடுத்தது மணமகள் தேவை விளம்பரம்.
ராமு: மாப்பிள்ளை பாக்யராஜ் ரசிகர்னு எப்படி சொல்றே...?
சோமு: மணமேடையில் வேட்டியை மடிச்சி கட்டி கிட்டு தாலி கட்டுறாரே..?
ராமு..?...?...?
அவள்: அவர் ஒரு போலி டாக்டர்னு தெரிந்தும் நீ ஏன் அவரை கல்யாணம் செய்தே?
இவள்: நானும் ஒரு போலி டீச்சர்தானே அதான்...!
|