|
பெயர் சராசரித் தமிழன்
வயது கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி
தொழில் வேலை தேடுவது
உப தொழில் சினிமா பார்ப்பது
நண்பர்கள் கடன் கொடுப்பவர்கள்
எதிரிகள் கடன் கொடுக்காதவர்கள்
பிடித்த வேலை அரசியலை அலசுவது
பிடித்த இடம் முன்பு டீக்கடைகள், இப்போது ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்
பொழுதுபோக்கு எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது
விரும்புவது கனவுலகம்
வெறுப்பது மாதக் கடைசி
நம்புவது சாமியார்களை
நம்பாதது அரசியல்வாதிகளை
சமீபத்திய சாதனை கம்ப்யூட்டர் ஆர்வம்
நீண்டகால சாதனை உயிர் வாழ்வது
ஒரே ஆசை கோடீஸ்வரன்
ஒரே எரிச்சல் பட்ஜெட்
முணுமுணுக்கும் பாடல் 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி'
- நிரஞ்சன்
பெயர் சராசரித் தமிழ்ப் பெண்
வயது கவலைகளால் வேகமாய் ஏறுகிறது
தொழில் ரேஷன் க்யூவில் நிற்பது
உப தொழில் கல்யாண க்யூவில் நிற்பது
பிடித்த வேலை ஜவ்வு மிட்டாய் சீரியல்கள் பார்ப்பது
பிடித்த இடம் புடவை கடை
நண்பர்கள் நண்பிகள்தாம்
எதிரிகள் கணவனின் நண்பர்கள்
நம்புவது பக்கத்து வீட்டுப் பெண்களை
நம்பாதது கணவனை
நீண்டகால எரிச்சல் மாமியார்
சமீபத்திய எரிச்சல் முப்பத்து மூன்றரை சதவீதம்
ஒரே பலம் அழுகை
பொழுதுபோக்கு கிசுகிசு பேசுவது
சமீபத்திய சாதனை ஆண்களுக்கு இணையாக வளர்வது
நீண்டகால சாதனை சென்னை பேருந்துகளில் பயணம் செய்து
- நிரஞ்சன்
பெயர் சென்னை காதலர்கள்
வயது குறைந்து கொண்டே போகிறது
பழைய விலாசம் பார்க், பீச், டைப்பிங் இன்ஸ்டிடியூட்
புதிய விலாசம் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள், டிஸ்கோதே, கம்ப்யூட்டர்
சென்டர்
நண்பர்கள் டெலிஃபோன், செல்ஃபோன், பேஜர்
எதிரிகள் எப்போதும் பெற்றோர்¢
முழுநேரத் தொழில் காதல்
பகுதி நேரத் தொழில் கல்வி
பிடித்த வேலை கடலை போடுவது
பிடித்த இடம் மறைவாய் இருக்க வேண்டும்
பிடித்த படம் காதல் படம்
மறந்தது மாநகரப் பேருந்துகளை
விரும்புவது பறக்கும் டூ வீலர்களை
நம்புவது வாழ்த்து அட்டைகளை
சமீபத்திய பொழுதுபோக்கு சாட்டிங்
நீண்ட கால பொழுதுபோக்கு மீட்டிங்
ஒரே எரிச்சல் திருமணம்
சமீபத்திய சாதனை காதலர் தினத்தைக் கொண்டாடுவது
நீண்ட கால சாதனை காதலித்துக் கொண்டே இருப்பது
-நிரஞ்சன்
பெயர் ராதிகா சரத்குமார்
புனைப் பெயர் சித்தி
வயது அதைப் பற்றிக் கவலையில்லை
தொழில் நடிப்பு
உப தொழில் திருமணம்
நண்பர்கள் டி.வி. பார்க்கும் பெண்கள்
எதிரிகள் டி.வி. பார்க்கும் ஆண்கள்
பிடித்த கதை கண்ணீர் கதை
பிடித்த பொருள் ஜவ்வு மிட்டாய்
பிடித்த வாகனம் ரயில்
சமீபத்திய எரிச்சல் கோடீஸ்வரன் நிகழ்ச்சி
நீண்ட கால எரிச்சல் காதல்
விரும்புவது அறிவாலயம்
வெறுப்பது போயஸ் கார்டன்
நம்புவது தன்னை மட்டும்
நம்பாதது சம்பிரதாயங்களை
சமீபத்திய சாதனை சின்னத்திரையில் வெற்றி
நீண்ட கால சாதனை வெள்ளித் திரையில் வெற்றி
முணுமுணுக்கும் பாடல் 'காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது'
-நிரஞ்சன்
பெயர் 2003
வயது அல்பாயுசு, ஒரு வருடம்
தொழில் முடிந்து விட்டது
நண்பர்கள் தீவிரவாதிகள்
எதிரிகள் கம்ப்யூட்டர் துறையினர்
பிடித்த இடம் கட்டிடங்கள், தகர்ப்பதற்கு
பிடித்த படம் சதாம்் படம்
பிடித்த பொருள் விமானமும் ஆந்த்ராக்ஸ் கிருமியும்
விரும்பியது உலகப் போர்
கிடைத்தது ஈராக் போர்
நம்பியது பூகம்பங்களை
நம்பாதது பொருளாதாரத்தை
ஒரே பொழுதுபோக்கு கோர்ட் தீர்ப்புகள்
ஒரே எரிச்சல் அரெஸ்ட்
ஒரே குரல் 'ஐயோ கொல்றாங்க'
மறந்தது தண்ணீரை
மறக்காதது பன்னீரை
ஒரே சாதனை ஈராக்கை பிடித்தது
(சிறிது
திருத்தப்பட்டது)
-நிரஞ்சன்
பெயர் தமிழகப் போலீஸ்
தொழில் காப்பது - ஆளும் கட்சியினரை
உப தொழில் தாக்குவது - எதிர்க்கட்சியனரை
நண்பர்கள் நிரந்தரமானவர்கள் அல்ல
எதிரிகள் பத்திரிகையாளர்கள் மட்டும்
பிடித்த நேரம் நள்ளிரவு
பிடித்த வேலை 'அம்மா' காருடன் ஓடுவது
பிடித்த இடம் போயஸ் கார்டன்
விரும்புவது டிரான்ஸ்பர் இல்லா வாழ்க்கை
வெறுப்பது மாமூல் இல்லா வாழ்க்கை
பார்ப்பது ஜெயா டி.வி.
பார்க்காதது சன் டி.வி.
சமீபத்திய எரிச்சல் வீடியோ விவகாரம்
நீண்ட கால எரிச்சல் வீரப்பன் விவகாரம்
தற்போதைய பொழுதுபோக்கு மறுப்பு பேட்டிகள் தருவது
நீண்ட கால பொழுதுபோக்கு தொப்பை வளர்ப்பது
ஒரே பயம் மத்திய அரசு நடவடிக்கை
ஒரே சந்தோஷம் ஒரு நபர் கமிஷன்
சமீபத்திய சாதனை டி.வி.க்களில் தெரிந்தது
நீண்ட கால சாதனை அவ்வப்போது கேஸ்கள் கண்டுபிடிப்பது
-நிரஞ்சன்
நன்றி அம்பலம்.கொம் |