www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

மின் சிரிப்பு

''டாக்டர் ஏன் கோபமா இருக்கார்?''

''ஒரு பேஷண்ட் அவர்கிட்ட 'டாக்டர் நான் ஆபரேஷனுக்கு அப்புறம் சொர்க்கத்துக்கு போவேனா? நரகத்துக்கு போவேனா?'னு கேட்டாராம்''
-------------------------------------------------------------------------------
''நான் ஊருக்கு போகும்போது என் பழைய சட்டைகளை எல்லாம் பீரோவுல வெச்சிட்டு போனேனே? பத்திரமா இருக்கா?''

''பாத்திரமா இருக்கு''
--------------------------------------------------------------------------------
''அந்த தியேட்டருக்கு ஃபேனே தேவையில்லை''

''ஏன். ஏ.ஸி. இருக்கறதாலயா?''

''ஏற்கெனவே காத்து வாங்கிட்டுதானே இருக்கு?''

- சி.பி.செந்தில்குமார்
--------------------------------------------------------------------------------
நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!

டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?

நோயாளி: சைதாப்பேட்டையிலே டாக்டர்!

-ச. ரபிக்ராஜா
--------------------------------------------------------------------------------

தொண்டர் (1) : தலைவர் புதுசா ஏஜென்ஸி வியாபாரம் ஆரம்பிச்சிருக்காரு போல இருக்கு.

தொண்டர் (2) : எப்படி சொல்றே?

தொண்டர் (1) : இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் எங்கள் கட்சி எம்.பி.க்கள் நிலையான ஆட்சி அமைய ஆதரவு

தருவார்கள்; 'இந்தச் சலுகை ஸ்டாக் உள்ள வரை மட்டுமே'ன்னு பேசியிருக்காரே!

--------------------------------------------------------------------------------

மகன்: ''என்னம்மா....மைசூர் பாகு அப்பாவுக்கு ஒண்ணு; எனக்கும் ஒண்ணுதானா?''

அப்பா: ''இது விஷயத்திலே உங்கம்மாவுக்கு 'பாகு' பாடே கிடையாது!''

-என்.கே.கண்ணன்

--------------------------------------------------------------------------------
"பக்கத்து வீட்டுல ரொம்பப் பந்தா பண்ணிக்கிறாங்க..."

"எப்படிச் சொல்றே?"

"கால்குலேட்டர்ல பெருக்கறதுக்குக் கூட வேலைக்காரி வைச்சிருக்காங்களே!"

- ஆ. சக்திவேலன்

--------------------------------------------------------------------------------

"எப்படி உங்க வயிற்றில் இவ்வளவு காயம் ஆச்சு?"

"பசி வயித்தைக் கிள்ளிடுச்சு டாக்டர்"

-எஸ். பொன்னுசாமி

--------------------------------------------------------------------------------

''பல் வலின்னு சொல்லிட்டு ஏண்டா கால்நடை டாக்டர்ட்ட பொயிட்டு வர்ற?''

''எனக்கு 'சிங்கப்பல்ல' சொத்தையாச்சே''

-புத்தூர் முருகன்

--------------------------------------------------------------------------------

ஒருவர்: ''நீ எழுதின கதை பேப்பர்ல வந்திருக்கு. உனக்கு யார் எழுதிக் கொடுத்தாங்க?''

மற்றவர்: ''அது இருக்கட்டும். நான் எழுதின கதை பேப்பர்ல வந்திருக்குன்னு யார் உனக்குப் படிச்சி சொன்னாங்க?''

-சந்தியூர் ஏ.கோவிந்தன்

--------------------------------------------------------------------------------

''சீர்'' என்னென்ன வேணும்ன்னு, ஏற்கனவே ஒரு லிஸ்ட் கொடுத்தீங்க! இப்போ, வேற 'லிஸ்ட்' கொடுக்கறீங்களே...!''

''இது 'சீர்'திருத்தக் கல்யாணமாச்சே..... அதான்!''

-கலை நண்பன்

--------------------------------------------------------------------------------

''உங்க ஊர்லே சமையலுக்கு ஆள் கிடைக்குமா''

''ஆளெல்லாம் கிடைக்காதுங்க! காய்கறிதான் கிடைக்கும்!

லவ்லிராஜா

--------------------------------------------------------------------------------

''அந்த சலூன்கடைக்காரர் ரொம்ப நல்ல டைப்!''

''எப்படி?''

''முடிவெட்டறப்ப தவறி காதை வெட்டிட்டா, முடிவெட்டினதுக்கு காசு வாங்கமாட்டாரு!''

- தஞ்சை இரா.ஆதி

--------------------------------------------------------------------------------

''பையன்கிட்டே உனக்கு மூளை இருக்கா'ன்னு கேட்டது தப்பாப் போச்சு''

''ஏன்?''

''அவன் ஸ்கேன் எடுத்த 'ரிப்போர்ட்டை'க் கொண்டு காட்டுறான்!''

-பாளை பசும்பொன்

--------------------------------------------------------------------------------

''டாக்டர் மார்ச்சுவரிக்கு எப்படி போகணும்''

''இதோ.... இந்த ஆபரேஷன் தியேட்டர் வழியாக் கூட போகலாம்''

- விசன்

--------------------------------------------------------------------------------

அவன்: உங்க ''கடைக்குட்டி'' என்ன பண்றான்?
இவர்: ''குட்டிக்கடை'' ஒண்ணு வச்சிருக்கான்!

-புதுவண்டி ரவீந்திரன்

--------------------------------------------------------------------------------
சத்தம் போட்டு விற்பவர் யார்?

'கத்தி' வியாபாரம் செய்பவர்!
--------------------------------------------------------------------------------
கருமிகள் மகாநாடு நடத்த சிறந்த இடம் எது ?

'கஞ்சன்' ஜங்கா!
--------------------------------------------------------------------------------
கதை சொல்லும் மரம் எது?

'நாவல்' மரம்!
--------------------------------------------------------------------------------
புகையைக் கக்கும் பிராணி எது?

சாம்'பிராணி'!
--------------------------------------------------------------------------------
கப்பல் ஏன் ஆடுது?

அது எப்பவும் 'தண்ணி'யிலே இருக்கு!
--------------------------------------------------------------------------------
மரம் செடி கொடி இல்லாத சோலை எது?

காசோலை!
--------------------------------------------------------------------------------
வளராத மரம் எது தெரியுமா?

கைகாட்டி மரம்!
--------------------------------------------------------------------------------
அரசியல் வாதிக்கு பிடித்த வாரம் எது!

ஆரவாரம்!
--------------------------------------------------------------------------------
காசு இல்லாமல் போகும் தந்தி எது?

வதந்தி!
-பி.கே.சங்கர்
--------------------------------------------------------------------------------
''என்னடா உங்கப்பா, உனக்குச் சொத்திலே வெறும் ஆயிரம் ரூபா மட்டும் எழுதி வச்சிருக்காரு?''
`'நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்டா!''

''சே... அந்த ஆயிரம் ரூபா கூட உன் பணம்தானா?''

டி. பன்னீர் செல்வம்
--------------------------------------------------------------------------------

தொண்டர்: நம்ம தலைவரு ஏது திடீர்னு அவர் பையனை மிலிட்டரிலே சேர்த்துட்டாரு?

மற்றவர்: பையன் பேரிலே நிறைய பணம் போட்டதை அவன் மேஜரானாதான் எடுக்க முடியும்னு பாங்கிலே
சொல்லிட்டாங்களாம்.

எஸ். எம்.சுந்தரம்

--------------------------------------------------------------------------------

''மாமியார் மருமகள் சண்டை போடறச்ச யாரோ ஒருத்தர் நடுவுல வந்து சோப்பைக் காட்டறாரே ஏன்?''

''அந்தச் சண்டையை ஸ்பான்சர் பண்றதே ஒரு சோப்புக் கம்பெனிகாரங்கதானாம்.''

மஞ்சுளா கிருஷ்ணன்

--------------------------------------------------------------------------------

''தாஜ்மஹாலைப் பார்கிறவங்க ஆச்சரியத்திலே மூக்கின் மேல் விரலை வைப்பாங்க.''
''இதென்ன பிரமாதம். கூவத்தைப் பார்க்கிறவங்ககூட, மூக்கின் மேல் விரலை வைக்கத்தான் செய்வாங்க.''

பொன். பிரபாகரன்
--------------------------------------------------------------------------------

''இந்த ஓட்டல் சர்வர் சுத்த `கர்நாடகமா` இருப்பான் போல....!

''ஏன் அப்படிச் சொல்றே...?''

''நானும் கால்மணி நேரமா தண்ணி குடிக்கக் கேட்கிறேன். காது கேட்காத மாதிரி போறானே...!

-ஜே. காளிதாஸ்
--------------------------------------------------------------------------------

''அந்த உர விற்பனைக் கடையில், மொத்தமாக வாங்குபவர்களுக்குக் கழிவு உண்டுன்னு சொன்னாங்களே?''
''மாட்டுச் சாணம், குப்பை கூளம் ஆகிய கழிவுகளைக் கொடுப்பாங்களாம்!''

-உடுமலை. பொன்னுசாமி
--------------------------------------------------------------------------------

''நடிகை ஜிகினாசிறீக்கு இருந்தாலும் இவ்வளவு ஆகாதுங்க...''

''ஏன்? என்னாச்சு?''

''தன்னோட பி.ஏ.வுக்கு பி.ஏ. தேவைன்னு விளம்பரம் கொடுத்திருக்கிறாங்களே!''

-ஆ.சக்திவேலன்.
--------------------------------------------------------------------------------

''ஏன் கால் தாங்கி நொண்டி நடந்து வர்றீங்க...''
''வந்த வழியில் ஒரு பெரிய பள்ளம் இருந்ததே பார்த்தீங்களா''

''பார்த்தேன்''

''நான் பார்க்கல அதான்''

-கே.பிரஷ்னேவ்
--------------------------------------------------------------------------------

காதலன்: ''கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்!''
காதலி: ''இல்லேன்னா?''

காதலன்: ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டவளோடயே காலம் தள்ளிக்கிறேன்!''
--------------------------------------------------------------------------------

காதலி: ''நம்ம கல்யாணம் எப்போ டியர்?''

காதலன்: ''என்னோட கல்யாணம் அடுத்த வாரம். உன்னோட கல்யாணத்தை பத்தி உங்கப்பன் கிட்ட கேளு!''

-கொங்கணாபுரம் வே.செந்தில்
--------------------------------------------------------------------------------

''அந்த நடிகைய ''டைட்டானிக்'' ஸ்டைல்ல எச்சில் துப்பச் சொன்னது தப்பாப் போச்சு''

''ஏன்?''

''எச்சிலோட ''பல் செட்டு''ம் சேந்து விழுந்துருச்சு''

-மவ்லவி, சிலைமான் ரபீக்.
--------------------------------------------------------------------------------

''படுத்த ஒரு மணி நேரம் கழிச்சு, காதுல ரயில் ஓடுற சத்தம் கேட்குது டாக்டர்!''

''நேற்றும் படுத்த ஒரு மணி நேரம் கழித்துத்தான் சத்தம் வந்ததா?''

''இல்ல டாக்டர்! நேத்து ரயில் இரண்டு மணி நேரம் லேட்டு''

- தரணிதரன்
--------------------------------------------------------------------------------

''அப்படி என்னய்யா...உன் பால் உசத்தி. இவ்வளவு விலை விற்கிறே?''

''பால்லே தண்ணிக்கு பதில் 'மினரல் வாட்டர்' இல்லே கலக்கிறேன்!''

-கோவீ.இராஜேந்திரன்
--------------------------------------------------------------------------------

"சொத்து பிரச்னையில் எனக்கும் என் அண்ணனுக்கும் தகராறு வந்துடுச்சு"

"அப்புறம் சொத்து யாருக்கு கிடைச்சுது?"

"ரெண்டு பேரோட வக்கீல்களுக்கு"

- சோலோ.ப. செல்வராஜ்
--------------------------------------------------------------------------------

''புதுசா பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கறவங்க ரொம்ப நல்ல மாதிரி! நான் அங்கே போனவுடனேயே காப்பி கொடுத்தாங்க!''
''சரியாகப் போச்சு! அந்தக் காபிப் பொடியையும், பாலையும், சர்க்கரையையும் நம்ம வீட்டுலேர்ந்துதான் கடன் வாங்கிட்டுப் போனாங்க!''

-என்.கே.பாலசுப்பிரமணியன்
--------------------------------------------------------------------------------

அவர்: ஹோட்டல் கடைக்காரர் கல்யாணத்துக்கு போனது தப்பா போச்சு.
இவர்: ஏன், என்னாச்சு?

அவர்: அதிகமா மொய் வைச்சவங்களுக்கு 'அன்லிமிடட்' சாப்பாடும், குறைவா மொய் வைச்சவங்களுக்கு அளவுச் சாப்பாடும் போடறாரு!
--------------------------------------------------------------------------------
ரமா: பால்கார ராமசாமி மேல மட்டும் உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை?
உமா: நான் 'அவர்பால்' ஈர்க்கப்பட்டு விட்டேன்!
-------------------------------------------------------------------------------
அவர்: புதுசா பூட்டுக் கம்பெனி ஒண்ணு ஆரம்பிச்சிருக்கேன்!
இவர்: அப்படியா...பெஸ்ட் ஆப் 'லாக்'!

-சேலம் கமலா
--------------------------------------------------------------------------------

''அது டாக்டரோட வீடு''
''சரி, அதுக்காக 'நோயுற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' னு வாசல்லே எழுதி வைக்கணுமா?''

-டி.என்.பாலகிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------

''எங்க மாப்பிள்ளை, தீபாவளிக்கு வந்துவிட்டுப் பொங்கலுக்குத்தான் போவார்...''

''தேவலையே...எங்க மாப்பிள்ளை பொங்கலுக்கு வந்துவிட்டு தீபாவளி முடிஞ்சுதான் கிளம்புவார்!''

-லெ.நா.சிவகுமார்.
--------------------------------------------------------------------------------

ஒருவன்: என் மாமனாரிடம் தீபாவளிக்கு கோட்டும் சூட்டும் கேட்டேன்.

மற்றவன்: வாங்கிக்கொடுத்தாரா....?

ஒருவன்: ஆமா...! ஒரு மாசத்திற்கு வாடகைக்கு வாங்கிக் கொடுத்தார்..!
--------------------------------------------------------------------------------
ஒருவன்: சித்த வைத்தியர்...ன்னு கேள்விப்பட்டிருக்கேன். இவரை சித்தி வைத்தியர்...ன்னு சொல்றியே...!
மற்றவன்: எங்க சித்தி எப்பவும் இவரிடம் தான் வைத்தியம் பார்ப்பார். அதனாலதான்.
--------------------------------------------------------------------------------

திருடன்: ரெண்டு தடவை உங்க வீட்ல திருடியிருக்கேனே...! ஏன் போலீஸ்ல கம்ளைண்ட் பண்ணல...?
வீட்டுக்காரர்: இருக்கிறதயாவது காப்பாற்றிக் கொள்ளணுமின்னு தான்...!

-தேனி.எஸ்.மாரியப்பன்.
--------------------------------------------------------------------------------

"எம் பையனுக்கு மெடிக்கல் காலேஜில சீட் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க..."
"அப்புறம்?"

"உள்ளூர் பர்னிச்சர் கடையிலேயே வாங்கிட்டோம்!"

- ஆ. சக்திவேலன்
--------------------------------------------------------------------------------

"தம் அடிக்கும்போது கழுத்துல இருக்குற மைனர் செயினை ஏன் கழட்டிட்டே?"
"செயின் ஸ்மோக்கர்-னு கெட்ட பேர் வந்துட கூடாது, பாரு"

- சி.பி. செந்தில்குமார்

நன்றி அம்பலம்.கொம்

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]