www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

பட்டாசு வெடிச் சிரிப்புகள்

"நீங்க ஆசிரமத்திலிருந்து வர்றீங்களா?"
"ஆமா....எப்படிக் கண்டுபிடிச்சீங்க-"
"பிஜிலி வெடினு கேட்கறதுக்குப் பதிலா 'குஜிலி' வெடி இருக்கான்னு கேட்கறீங்களே!"
--------------------------------------------------------------------------------

"ஒரு சாம்பிள் பட்டாசை வெடிச்சுக் காட்டுங்க. அது நல்லா வெடிச்சுதுன்னா நான் உங்கக் கடையிலேயே பட்டாசு வாங்கிக்கிறேன்."
"ரொம்ப சந்தோஷம். எந்தப் பட்டாசை வெடிச்சுக் காட்டணும்?"
"பத்தாயிரம் வாலாவை!"
--------------------------------------------------------------------------------

"மாப்ளே, போன தீபாவளிக்கு தங்கச் சங்கிலி வாங்கித் தந்தேன். இந்தத் தீபாவளிக்கு உங்களுக்கு என்ன வேணும்?"
"அதை மார்வாடிக் கடையிலிருந்து மீட்டுத் தாங்க மாமா!"
--------------------------------------------------------------------------------

"ரொம்ப நாளாச்சு. இன்னொரு தலைதீபாவளி கொண்டாடணும்னு ஆசையா இருக்கு மாமா!"
"புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?"
"உங்களோட கடைசிப் பெண்¢ணை...!"
--------------------------------------------------------------------------------

"பட்டாசுக்கடை வெச்சிருந்தவரை ஏன் போலிஸ் பிடிச்சுக்கிட்டுப் போறாங்க?"
"இங்கு மனித வெடிகுண்டு கிடைக்கும்னு போர்டு மாட்டியிருந்தாராம்!"
--------------------------------------------------------------------------------

"ஏன் டல்லா இருக்கே?"
"தீபாவளிக்குப் பட்டாசு வாங்கிட்டு பஸ்ல வரும்போது யாரோ என் பர்ஸை 'சுட்டு'ட்டாங்க!"
--------------------------------------------------------------------------------

"தீபாவளி ரிலீஸ் படத்துக்கு ரொம்பக் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி வெச்சிருந்தேன். ஆனா போக முடியலை!"
"ஏண்டா?"
"அன்னிக்குன்னு பார்த்து என் தாத்தாவும் 'டிக்கெட்' வாங்கிட்டாரு!"
--------------------------------------------------------------------------------

"தீபாவளி போனஸ்ல அல்வா வாங்கிட்டுப் போறீங்க போலிருக்கே?"
"வெறுப்பேத்தாதீங்க. தீபாவளி போனஸே இதுதான்!"
--------------------------------------------------------------------------------

"தீபாவளிக்கு ஓவியர் என்ன பட்டாசு வாங்குவார்?"
"தெரியலையே. என்ன வாங்குவார்?"
"பென்சில்!"
--------------------------------------------------------------------------------

பெண் 1: "உன் மாமியாரை 'பட்டாசு வெடிக்கறதுக்கு வாங்க அத்தை'னு ரொம்பவும் பணிவா கூப்பிடுறியே, என்ன விஷயம்?"
பெண் 2: "நான் வெச்சிருக்கிறது பட்டாசு இல்லை, நிஜமான அணுகுண்டு!"
--------------------------------------------------------------------------------

"எங்கப்பா சரியான கஞ்சன்!"
"ஏண்டா அப்படிச் சொல்றே?"
"கொலுவில் வெச்ச ப்ளாஸ்டிக் பட்டாசையே தீபாவளிக்கும் வெச்சுக்கோனு சொல்லிட்டாரு!"
--------------------------------------------------------------------------------

"உங்க வாழ்க்கையில் இதுதான் கடைசித் தீபாவளி."
"என்ன சொல்றீங்க டாக்டர்?"
"தீபாவளிக்கு அப்புறம் உங்களுக்கு நான் ஆப்ரேஷன் பண்றதா முடிவு பண்ணிட்டேன்!"
--------------------------------------------------------------------------------

"வெடிச் சத்தம்னாலே எனக்கு ரொம்ப பயம். ஆனா இன்னிக்கு வெடிச்சதுல நான் ரொம்பவும் சந்தோஷமா இருக்கேன்!"
"என்னடி சொல்றே. புரியலையே?"
"என் மாமியார் பத்த வைச்ச ஸ்டவ் வெடிச்சுருச்சு!"
--------------------------------------------------------------------------------

வி.என்.பிரபு
அந்த விஞ்ஞானியை ஏன் கைது பண்றாங்க?
"ராக்கெட்" விட பலகோடி ரூபாய் செலவு கணக்குக் காட்டிட்டு, வெறும் தீபாவளி ராக்கெட் விட்டாராம்.

பா.ஜெயக்குமார்
--------------------------------------------------------------------------------

ஏண்ணே பக்கிரி தன் புள்ளயப் போட்டு இந்த அடி அடிக்கிறான்
தீபாவளிக்கு வெடிக்க 'ஜெலட்டின் குச்சி'தான் வேணும்னு அடம்புடிச்சானாம்.

சந்தோஷ்
நன்றி அம்பலம்.கொம்

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]