www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

வானொலி ஒலிபரப்பு உலக சாதனையை முறியடித்துள்ள சிவாந்தியின் சாதனைப் பயணம் நிறைவு

ஐரோப்பிய தழிழ் ஓலிபரப்பு கூட்டுதாபனத்தின் (ETBC) வானொலியூடாக செல்வி சிவாந்தி சிவசுப்பிரமணியம் நடாத்திய உலக சாதனை பயணத்தின் 28.10.2003ஐந்தாவது நாள் பொழுதில் சுவீடன் நாட்டவரால் நிகழ்த்தப்பட்ட உலக சாதனையான 103.5மணித்தியாலங்களை முறியடித்து,புதிய 111.45 மணித்தியாலங்களை எட்டினார்.

தனது சாதனைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிச் சென்ற சிவாந்தி,30.10.2003ஐக்கிய இராச்சிய நேரம் அதிகாலை 1.45க்கு தனது உடல் நிலையில் ஏற்பட்ட சோர்வு காரணமாக தீர்மானித்திருந்த 123மணித்தியாலங்களை எட்டுமுன்னர்,தனது புதிய சாதனைப் பயணத்தை 111.45மணித்துளிகளை முடித்துக்கொண்ட வெற்றியோடு நிறைவுசெய்தார்.

புதிய கின்னஸ் உலக சாதனையாக 111மணித்தியாலங்களும் 45நிமிடங்களை நிறைவு செய்து இன்று ஓலிபரப்புத்துறையில் உலகின் முதலாவது பெண் அறிவிப்பாளர் என்ற பெருமையை பெற்று உலக தமிழருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

உலக சாதனை படைத்த சிவாந்தி சிவசுப்பிரமணியத்துக்கு உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் தொலைபேசியூடாகவும்,தொலைநகலுடாகவும்,மின்னஞ்சலு}டாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணமுள்ளனர்.வெப்தமிழன் சார்பாக உலக சாதனை நிகழ்த்திய சிவாந்தி சிவசுப்பிரமணியத்துக்கு வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

உலக சாதனையாளர் சிவாந்தி சுப்பிரமணியம் அவர்கள் தனது அடுத்த உலகசாதனை முயற்சியாக பரதநாட்டியத்தில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆடுவதாக தீர்மானித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவருடைய அடுத்த உலகசாதனையும், தொடரவுள்ள அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வெப்தமிழன்.கொம் தளம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]