|
தளையறு மென்கலன் (Free Software) மற்றும் திறந்த ஆணைமூல (Open
Source) உலகில் பிளத்தல் (Forking) என்பது ஒரு தவிர்க்க வேண்டிய
செயலாகக் கருதப்படும். எரிக் ரேமண்டின் 'கதீட்ரல் அண்ட் தி பஸார்'
புத்தகத்தின் நான்காம் அத்தியாத்தில் இது மிகவும் விரிவாக
விளக்கப்பட்டுள்ளது. (இந்தப் புத்தகத்தை
தளயறு மென்கலன் கழகத்தின்
தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக்
கொள்ளலாம்).
ழா கணினி திட்டத்தின் ஒரே சாதனை, தமிழ் லினக்ஸ்
உலகைப் பிளவுபடச் செய்து கொண்டிருப்பது. இதற்குப் பல
உதாரணங்களைச் சொல்லமுடியும். ஒரு சில
பிளத்தல் -1
தமிழில் கணினி வரவேண்டுமானால் அதற்கு முக்கிய தேவை தமிழ்
உள்ளீடுகளைச் செய்வதற்கு விசைப்பலகை தேவை. இந்த விசைப்பலகை
செயலியை
க்னோம்
(ஜிடிகே-இயந்திரத்தின் அடிப்படையிலானது), மற்றும்
கேடிஈ
(க்யூடி
இயந்திரத்தினாலானது) இரண்டுக்கும் தமிழ் லினக்ஸின் இரண்டு
முக்கிய தூண்களான தினேஷ் (க்னோம்), வசீகரன் (கேடிஈ) இரண்டிலும்
வடிவமைத்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை தமிழில் தரக்குறியீடு
மாறும் பொழுதும், விசைப்பலகை அமைப்பு மாறும்பொழுதும் இவர்கள் பல
முறை தங்கள் செயலிகளை மாற்றியமைத்தும், திருத்தி எழுதியியும்
அளித்து வருகிறார்கள். இதற்கு ஆதாரமாக விளங்கும் எழுத்துரு
இயக்கியான்
பாங்கோ
சிவராஜினால்
வடிவமைக்கப்பட்டு வருகிறாது. ஆனால் ழா-கணினியின் பக்கங்கள் என்ன
சொல்கின்றன:
Mr. Bharathi is co-ordinating the keyboard driver
development efforts.
Sudharsan of Crescent Engineering college has developed
setkb utility with old tamil typewriter layout. Mahesan from
Thoothukudi has completed TamilNet 99 (phonetic) layout for
Tamil VP.
We need to integrate all the key board layouts into a
single application and test them extensively for errors.
சிரிப்புத்தான் வருகிறது; கூடவே எரிச்சலும். இப்பொழுது
கிடைக்கும் தமிழ் விசைப்பலகை tamil_gtk2im என்பதைக் கொண்டு தஸ்கி,
யுனிகோட் இரண்டிலும் கோப்புகளைத் தயாரிக்க முடியும். இது மூன்று
வேறு விசைப்பலகை வடிவங்களுடன் வருகிறது (தமிழ்நெட், அஞ்சல்,
மற்றும் தமிழ்த்தட்டச்சு விசைப்பலகை). இந்தச் செயலிகளைப்பற்றியோ,
இதை வடிவமைத்துத் தரும் ஆர்வலர்களைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட
அவர்களின் இணைய பக்கத்தில் இல்லை. ஒன்று இவர்கள் ஒட்டு
மொத்தமாகத் திருடுகிறார்கள். அல்லது அடிப்படையிலிருந்து
முற்றிலும் வேறான ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில்
ஈடுபட்டிருந்தால் அது தேவையற்ற பிளத்தல்.
எந்த வழியிலும் இது நேர்மையானதும் இல்லை, தமிழுக்குத்
தேவையானதும் இல்லை. (தொடர்ந்து...) |